tamilnadu

img

நூறு நாள் வேலையில் சாதிப் பாகுபாடு நடவடிக்கை கோரி பொதுமக்கள் மனு

நூறு நாள் வேலையில் சாதிப் பாகுபாடு நடவடிக்கை கோரி  பொதுமக்கள் மனு

திருவள்ளூர், அக்.23- கும்மிடிப்பூண்டி அருகே மேல்முத லம்பேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சாதிப் பாகுபாடு காட்டப்படுவதாகவும், முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டி சிபிஎம் தலைமையில் பொதுமக்கள் வியாழனன்று வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரிடம் மனு அளித்தனர். 400-க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் பணியாற்றி வரும் நிலையில், மக்கள்நல பணியாளர் நளினி என்பவர் இந்த வேலை எஸ்சி மற்றும் எஸ்டி மக்களுக்கு மட்டுமே என்று தெரிவித்துள்ளார். 18 மாதங்களில் நடைபெற்ற வேலையில் நான்கு வாரங்கள் கூட மற்ற பிரிவு மக்களுக்கு முழுமையாக வேலை வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர். ஆறு நாட்கள் வேலை செய்தாலும் இரண்டு நாட்கள் மட்டுமே கணக்கில் வருவதாகவும், வேலைக்கு வராதவர்களுக்கும் கணக்கு காட்டி நூறு நாள் பணம் மோசடி செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு கள் நடைபெறுவதாகவும், நான்கு முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றும் தெரிவித்தனர். தொகுப்பு வீடுகள் வாங்கிக் கொடுக்க பயனாளி களிடம் பணம் வசூலிப்பதாகவும், இவை அதிகாரிகளின் துணையோடு நடப்ப தாகவும் குற்றம்சாட்டினர். அனைவருக்கும் பாகுபாடின்றி வேலை வழங்கவும், முறை கேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் கோரி மனு அளித்தனர். சிபிஎம் வட்டக்குழு உறுப்பினர் எம்.சி.சீனு, கிளை முன்னணி ஊழியர்கள் பி.குமார், இ.ரங்கன் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.