tamilnadu

img

நாடெங்கும் பொதுவுடைமைக் கருத்துகள் பரவிட... - வைகோ

1962 ஆம் ஆண்டில், இந்திய - சீன எல்லை மோதல் நடைபெற்ற காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த நெருக்கடியான நேரத்தில் உதயமான ஏடு ‘தீக்கதிர்’. ‘தீக்கதிர்’ ஏடு வார இதழாக 29.06.1963 அன்று கோவை மாவட்டத்தின் தொழிற்சங்கத் தலைவர்களுள் ஒருவரான அப்பு அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. ‘‘செந்தீக்கதிரை உயர்த்திப் பிடிப்போம்’’ என்ற வாசகங்களுடன் வெளிவந்த ‘தீக்கதிர்’ ஏடு இன்று நாளேடாக வளர்ச்சி பெற்று சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் பதிப்பாகி வெளிவந்துகொண்டு இருக்கிறது. தீக்கதிர் ஏட்டின் ஐந்தாவது பதிப்பு நெல்லையிலிருந்து 22.09.2023 அன்று வெளிவர இருப்பதையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் பிரகாரஷ் காரத் அவர்கள் பதிப்பினை துவக்கி வைக்க இருப்பதையும் அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். பாட்டாளி வர்க்கத்தினரின் அடிமை விலங்கொடிக்க நாள்தோறும் எழுச்சி முழக்கமிடும் ‘தீக்கதிர்’ நாளேடு இன்னும் பல பதிப்புகளை வெளியிட்டு, நாடெங்கும் பொதுவுடைமை கருத்துக்கள் பரவிட பாடுபட வேண்டும் என்ற விழைவுடன் தீக்கதிர் நாளேட்டிற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். விழா நிகழ்ச்சிகள் சிறப்புடன் அமைந்திடவும் என் அன்பான வாழ்த்துகள்.