குடியிருப்புகளில் நுழையும் கரடி அச்சத்தில் பொதுமக்கள்
உதகை, செப்.13- உதகை அய்யப்பன் கோவிலுக்குள் நள்ளிரவில் உணவு தேடி கரடி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை நகருக்குள் கடந்த மாதம் ஒரு கரடி புகுந்தது. குடியிருப்பு பகுதிகள் மற்றும் விடுதிகளுக்குள் கரடி சுற்றி திரிந்தது. பகல் இரவாக நக ரின் முக்கிய வீதிகள், தனியார் விடுதிகள் மற்றும் குடி யிருப்புகளுக்குள் என சுற்றி திரிந்த கரடி பொது மக் களை அச்சமடைய செய்து வந்தது. உதகை மையப் பகுதியான நூலகம் அரசு மருத்துவமனையை தாண்டி தாவரவியல் பூங்கா பகுதிக்கு வந்து தனியார் ஓட்டல் பகுதிகளிலும் சுற்றித்திரிந்தது. பின்னர் கூண்டு வைத்து அந்த கரடி பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில், சனி யன்று அதிகாலை மீண்டும் ஒரு கரடி, உதகை அய்யப் பன் கோவிலுக்குள் உணவு தேடி புகுந்த வீடியோ வெளி யாகி வைரலாகி வருகிறது. கோவில் வளாகத்திற்குள் புகுந்த அந்த கரடி பின் புறம் உள்ள கோவில் அலுவலகத்தின் கண்ணாடி ஜன் னலை திறந்து உள்ளே சென்றது. பின்னர் அங்கிருந்த மேஜையின் மேல் ஏரி கல்லாபெட்டி உள்ளிட்ட பகுதிக ளில் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என தேடியது. ஆனால் உணவுப் பொருட்கள் மீதும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது. இதைத் தொடர்ந்து வனச்சரகர் ராம்பிரகாஷ் தலை மையிலான குழுவினர் அந்தப் பகுதியில் வந்து நேரில் விசாரணை நடத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். மேலும் அய்யப்பன் கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள புதர்களை அகற்ற தேவை நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். இதேபோன்று, வெள்ளியன்று இரவு குன்னூர் அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி அப்பகுதியில் கணே சன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். அதிகாலை வேளையில் அங்கு சென்ற கரடி கடையின் பூட்டை தத்துரூபமாக உடைக்கும் காட்சி அங்கு பொருத்தப் பட்டிருந்த சிசிடிவியின் பதிவாகியுள்ளது. கடையை உடைத்தபின் கரடி சாக்லேட் சாப்பிடும் வீடியோவும் பதி வாகியுள்ளது. எனவே அப்பகுதியில் சுற்றி திரியும் கரடியை வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.