குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பாபநாசம், செப். 8- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் - திருவையாறு நெடுஞ்சாலையில் உள்ள அய்யம் பேட்டை அருகே கணபதி அக்ரஹாரத்தில் பாப்பாத்தி அம்மன் கோவில் அருகே ஏராளமான குப்பைகள் கொட்டப்படுகின்றன. பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகள் பலத்த காற்றடிக்கும் போது, சாலையில் பறக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கக் கூடிய அபாயம் நிலவுகிறது. மழை நாட்களில் துர்நாற்றம் வீசவும், தொற்று வியாதிகள் பரவவும் வாய்ப்புள்ளது. கணபதி அக்ரஹாரத்தில் குப்பை கிடங்கு ஏற்படுத்தவும், குப்பைகளை மறு சுழற்சிக்கு உட்படுத்தவும் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.