tamilnadu

img

குப்பைக் காடான அம்மாபட்டினம் கடற்கரை உடனே தூய்மைப்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள்

குப்பைக் காடான அம்மாபட்டினம் கடற்கரை உடனே தூய்மைப்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள்

அறந்தாங்கி, ஆக.27 - புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் ஊராட்சி, 3000-க்கும் மேற்பட்ட குடும்பங் களும், 10,000-க்கும் மேற்பட்ட  மக்களும் வசித்து வரும் பெரிய ஊராட்சியாகும். இந்த  பகுதிகளில் கடற்கரையோரம் வசிக்கும் சில குடும்பங்கள் மீன்பிடி தொழில் செய்து வரு கின்றன. கடற்கரையிலிருந்து வெறும் 20 அடி தூரத்திலேயே வீடுகள் உள்ளன.  அம்மாபட்டினம் வடக்குத்தெரு கடற் கரையோர பகுதிகளில் குப்பைகள் அதிகமாக  காணப்படுகிறது. இந்த குப்பைகளுடன் சாக்கடை நீரும் கலந்து துர்நாற்றமாக உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் குப்பைகளைத் தாண்டி செல்லும் அவல நிலை உள்ளது. இந்த குப்பைகளில் ஆடு, மாடுகள் மேய்வதால் அதன் கழிவுகளும் குப்பைகளுடன் சேர்ந்து விடுகிறது. மழைக் காலங்களில் கொசு அதிகமாகிறது. இதனால்  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும்  சிரமத்திற்கு ஆளாகின்றனர்.  கடற்கரைக்கு வரும் வெளியூர் மக்கள் குப்பைகளை பார்த்து முகம் சுளிக்கின்றனர். குப்பைகளை அகற்ற இந்த பகுதி மக்கள்  பலமுறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. மூன்று மாதத்திற்கு முன்பு இதே பிரச்சனையை நாளிதழ் வாயிலாக தெரியப்படுத்திய போது, பெயரளவில் மட்டுமே சுத்தம் செய்தனர். எனவே ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வா கங்கள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றி, ஆங்காங்கே குப்பை தொட்டிகளை  அமைத்து, கடற்கரையை தூய்மை செய்வது டன் குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ள  வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.