மயான வசதி கேட்டு செப்.30 இல் காத்திருப்புப் போராட்டம்
தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவிப்பு
தருமபுரி, செப்.19- குப்பன்கொட்டாய், அத்தி முட்லு, ஏழுகுண்டூர் ஆகிய கிரா மங்களுக்கு மயான வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி செப்.30 ஆம் தேதியன்று காத்தி ருப்புப் போராட்டம் நடைபெற வுள்ளதென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்துள் ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தருமபுரி மாவட்டத் தலைவர் எம்.முத்து, மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், தரும புரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், குப்பன்கொட்டாய் கிராமத்தில் போயர் சமூகத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பகுதியினர், கூலி மற்றும் கல் உடைக்கும் வேலை செய்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் இறந்தால் அருகிலுள்ள வாழைத் தோட்டம் என்ற இடத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்து வந்த னர். மாற்று சமூகத்தினர் அந்த மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்காததால், இறந்தவர் களை தங்கள் வீட்டின் அருகே அடக் கம் செய்யும் அவலநிலை நீண்ட ஆண்டுகாலமாக தொடர்கிறது. இக்கிராம மக்கள் அரசு அதிகாரி களிடம் கோரிக்கை விடுத்தும், மயான வசதி ஏற்படுத்தவில்லை. எனவே, குப்பன்கொட்டாய், சாம னூர் ஊராட்சி அத்திமுட்லு, பஞ்சப் பள்ளி ஊராட்சி ஏழுகுண்டூர் ஆகிய கிராமங்களுக்கு மயான வசதி செய்துதரக்கோரி செப்.30இல் தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினத்தை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பாலக் கோட்டில் காத்திருப்புப் போராட் டம் நடைபெறவுள்ளது. பட்டியலினத்தவர் மீது பொய் வழக்கு தருமபுரி மாவட்டம், அரூர், அம் பேத்கர் நகர், புது காலனியைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவரின் மகன் நிவாஸ். இளங்கலை பட்டப் படிப்பு இரண்டாமாண்டு படிக்கும் இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர். கடந்த செப்.15 ஆம் தேதியன்ற நிவாசும், இவரது உறவினரான ஜெயலட்சுமி என்பவரும் அரூர் சந்தைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த மூன்று பேர், மோத வருவதை போல் தெரிந்ததால், ‘நிவாஸ் மெது வாக போங்கன்னா’ என்று கூறி யுள்ளார். அதற்கு எதிரே வந்தவர் கள் நிவாஸை ஆபாசமான வார்த் தைகளாலும், அவர் பட்டியலினத் தைச் சேர்ந்தவர் என்று தெரிந்த தும் சாதி பெயரை சொல்லி திட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து சங்கிலிவாடி கிராமத் தைச் சேர்ந்த வினோத் குமார், அருண் மற்றும் 10 நபர்கள் மீது செப்.17 ஆம் தேதியன்று அரூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப் பட்டது. அதன்பேரில் வழக்குப்ப திவு செய்யப்பட்டது; ஆனால், கைது செய்யப்படவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட நிவாஸ் மீது காவல்துறை பொய் வழக்குப் பதிந்துள்ளனர். எனவே, நிவாஸை சாதிப்பெயரை சொல்லி இழிவாகப் பேசி தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும். நிவாஸ் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும் பப்பெறக்கோரி அரூரில் செப்.23 ஆம் தேதியன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.