தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராட்டம்
கோவை, ஆக.13- சென்னையில் போராடிவரும் தூய் மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரி வித்து, கோவையில் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் மாநக ராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் பணி யாற்றி வரும் தூய்மைப் பணியாளர் கள் மற்றும் ஓட்டுநர்கள், உதவியா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும். தூய்மைப் பணியில் அவுட் சோர் சிங் மற்றும் ஒப்பந்த முறையை முற்றி லும் கைவிட வேண்டும். சென்னையில் போராடி வரும் தூய்மைப் பணியாளர் களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செவ் வாயன்று சிஐடியு, ஏஐடியூசி, தூய்மைப் பணியாளர் நல சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோயம்புத்தூர் லேபர் யூனியன் பொதுச் செயலாளர் (ஏஐசி டியு), சி.ஆர் பாலகிருஷ்ணன் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் செயலாளர் என்.செல்வராஜ், சிஐ டியு கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க தலை வர் ஜே.ராஜாக்கனி, பொதுச் செயலா ளர் கே.ரத்தினகுமார், சமூக நீதி சங் கம் பன்னீர்செல்வம், பிரபாகரன், தமிழ் புலிகள் கட்சி கார்த்திக், தூய்மைப் பணியாளர்கள் நல சங்கம் சாமுவேல், மகேஷ் குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.