tamilnadu

பிஎஸ்இ பாடத்திட்டத்தை கைவிட கோரி புதுச்சேரியில் செப்.5 போராட்டம்

பிஎஸ்இ பாடத்திட்டத்தை கைவிட கோரி  புதுச்சேரியில் செப்.5  போராட்டம் 

புதுச்சேரி, செப்.1-   சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி கல்வித்துறை முன்பு செப்டம்பர் 5ல் முற்றுகை போராட்டம் நடத்தப்படவுள்ளது. 2024 -25 கல்வி ஆண்டில் புதுச்சேரி அரசின் கல்வித் துறையால் சி. பி.எஸ்.இ. பாடத்திட்டம் புகுத்தப்பட்ட தால், புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.  பாடத்திட்டம், தேர்வுகள் முறை, தாய்மொழி வழி கல்வி புறக்கணிப்பு, ஆசிரியர் பற்றாக்குறை, முழுமை யான பயிற்சியின்மை ஆகிய பிரச்சனை களால் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். தேர்வு மதிப்பெண்களால் உயர் கல்விக்கு செல்வதற்கு தடை உருவாகி இருக்கிறது. இடைநிற்றல் கடந்த காலங்களை விட அதிகமாகிக் கொண்டிருக்கிறது.  முதல்வரிடம் வலியுறுத்தல்  மாண வர்களின் எதிர்கால நலன் கருதி இப்பிரச்ச னைகளுக்கு உடனடியாக தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமச்சந்திரன் தலைமை யில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம் பிரபுராஜ் ஆகியோர் புதுச்சேரி மாநில முதல்வர்   ரங்கசாமியை திங்கள்கிழமை (செப்.1)  சந்தித்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் உள்ள குளறுபடிகளை எடுத்துரைத்து, பிரச்சினைகளுக்கு  தீர்வு காண கோரிக்கை விடுத்தனர்.  அரசுப் பள்ளிகளில் மாநில சமச்சீர் கல்வி திட்டத்திற்கும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்க்கும் சம வாய்ப்புகள் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி செப்டம்பர் 5 அன்று புதுச்சேரி கல்வித்துறை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் நடை பெறுகிறது. போராட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார் என்று கட்சியின் மாநில செயலாளர் எஸ். ராமச்சந்திரன் முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.