துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டில் ஆர்ப்பாட்டம்
கிராமப்புற வேலை திட்டத்தில் வேலையும் சட்டக்கூலியும் வழங்கக் கோரி, துரிஞ்சாபுரம் பிடிஓ அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் நிர்வாகிகள் எம்.பிரகலநாதன், ஜி.பன்னீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், தண்டராம்பட்டு பிடிஓ அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் நிர்வாகிகள் டி.கே.வெங்கடேசன், இரா.அண்ணாமலை, கே.கே.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
