சு.வெங்கடேசன் எம்.பி.க்கு கொலை மிரட்டல் கயவர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், ஜுலை 30 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நாடாளுமன்றத்தில், பஹல்காம் தாக்குதல் விவகாரம் குறித்து பேசியதற்காக தொலைபேசி யில் கொலை மிரட்டல் விடுத்த கயவர் களை கைது செய்யக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத் தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கும்ப கோணம் மாநகரச் செயலாளர் செந்தில் குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், மாவட்டக் குழு உறுப்பினர் கண்ணன், மாமன்ற உறுப்பினர் ஆ.செல்வம், மாதர் சங்க மாநகர செயலாளர் சுமதி, மூத்த தோழர்கள் ஆர். ராஜகோபா லன், பழ.அன்புமணி, ஆர். சந்திர சேகரன், கே.ஆர்.சந்திரன், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஜெயக் குமார் உட்பட பலர் பேசினர். தஞ்சாவூர் பேராவூரணி பெரியார் சிலை அரு கில், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சிபிஎம் ஒன்றியக் குழுக்கள் சார்பில் புதன்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் பேராவூரணி ஒன்றியச் செயலாளர் வே.ரெங்கசாமி, சேது பாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், எம்.செல்வம் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். திராவி டர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப் பாளர் சித.திருவேங்கடம், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச் சாமி, விவசாயிகள் சங்கம் ருக்கூன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கட்சி யினர் திரளாகக் கலந்து கொண்டனர். கரூர் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில், கரூர் தலைமை தபால் அலுவ லகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. ராஜூ, கே.சக்திவேல், சி.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.கந்த சாமி, ஆர்.ஹோச்சுமின், எம்.சுப்பிர மணியன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.