tamilnadu

img

கரிகாலி கிராமத்தில் சாலை, குடிநீர் வசதி செய்து தரக் கோரி காத்திருப்பு போராட்டம்

கரிகாலி கிராமத்தில் சாலை, குடிநீர் வசதி செய்து தரக் கோரி காத்திருப்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 22-  திருச்சி புறநகர் மாவட்டம் தா.பேட்டை ஒன்றியம் கரிகாலி ஊராட்சியில் நூறு நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை, சட்டக்கூலியுடன் தொடர்ந்து வழங்க வேண்டும். கரிகாலி பஞ்சாயத்தில் குடிதண்ணீர், சாக்கடை, சாலை வசதி, சுடுகாட்டு பாதை, பள்ளிக்கூடம் அருகில் வேகத்தடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் இணைந்து செவ்வாய் அன்று கரிகாலி ஊராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். போராட்டத்தை விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் வீரவிஜயன் துவக்கி வைத்தார். விவசாய சங்க மாவட்டச் செயலாளர் நடராஜன், ஒன்றியச் செயலாளர் சேகர், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பாண்டியன், மூத்த தோழர் சுப்பிரமணியன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பாலகுமார், சிஐடியு பொறுப்பாளர் காமராஜ் ஆகியோர் பேசினர். இதில், கிளை உறுப்பினர்கள், மாதர் சங்க நிர்வாகிகள் யசோதா, மரகதம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.