tamilnadu

img

சாலை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

சாலை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அக்.8 - பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் இளங்கோவன் துவக்க உரை ஆற்றினார். கோட்ட துணைத் தலைவர் பி. சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். கோட்டச் செயலாளர் சி.சுப்ரமணியன் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன் நிறைவுரையாற்றினார். கோட்ட பொறியாளர் மார்க்கண்டன் நன்றி தெரிவித்தார். இதில் பெரம்பலூர் கோட்டப் பொறியாளர் மீதும், திருச்சி கண்காணிப்பு பொறியாளர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு நிலை இரண்டு சாலை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். பெரம்பலூர் கோட்டப் பொறியாளர் கலைவாணி, அரசாணையின் சாரம்சத்திற்கு மாறான விளக்கம் தெரிவித்து குழப்பம் ஏற்படுத்தும் செயலை வன்மையாக கண்டிக்கி றோம். பெரம்பலூர் நெ.க.ம.ப. கோட்டத்தில் பணிபுரிந்து வரும் சாலை பணியாளர் மணிமாறன், பெரியசாமியை உடனே சாலை பணிக்கு அனுப்ப வேண்டும். சாலை பணியாளர்களை மாற்று சாலைகளுக்கு பணிக்கு அனுப்பும் பொழுது போக்குவரத்துச் செலவினத் தொகையை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.