உங்களுடன் ஸ்டாலின்" முகாமுக்கு நிதி கோரி ஆர்ப்பாட்டம்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவதற்கு நிதி விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவண்ணாமலையில் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அலுவலர்கள் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.