பெண்கள்-மாணவர்களை தாக்கிய வத்திராயிருப்பு காவல் அதிகாரி மீது நடவடிக்கை கோரி போராட்டம்
திருவில்லிபுத்தூர், அக்.10- விருதுநகர் மாவட்டம், வ. புதுப்பட்டி கிராமத்தில் தீண்டா மைச் சுவரை அகற்ற வலியு றுத்தி நடைபெற்ற போராட் டத்தில் அராஜகமான முறை யில் நடந்து கொண்டு பெண்கள் மற்றும் மாணவர் சங்க மாவட்ட செயலாள ரை தாக்கிய வத்திராயிருப்பு காவல்துறை அதிகாரி, காவல்துறையினர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி, அகில இந்திய விவசா யத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வத்திராயிருப்பு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஜெயக் குமார் தலைமை தாங்கினார். தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநில பொருளா ளர் கே.முருகன் துவக்கி வைத்து பேசினார் . விவசாய தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலை வர் ஏ. லாசர் நிறைவுரை யாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ. குருசாமி போராட்டத்தை ஆதரித்துப் பேசினார் . முன்னணியின் மாவட்ட தலைவர் லட்சுமி, விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் சுந்தரபாண்டியன் பொரு ளாளர் ஜோதிலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நில ஆவணங்களை கொடுக்காமல் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல் பட்ட வத்திராயிருப்பு வட்டாட்சி யர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அயன் கரிசல் குளம் கிராமத்தில் பட்டிய லின மக்கள் வைத்த திருமண வாழ்த்து பிளக்ஸ் பேனர்க ளை திழித்து சேதப்படுத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டது.
