tamilnadu

img

பட்டியலின இளைஞர் காளீஸ்வரன் படுகொலைக்கு கண்டனம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்  மானாமதுரையில் ஆர்ப்பாட்டம்

பட்டியலின இளைஞர் காளீஸ்வரன் படுகொலைக்கு கண்டனம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர்  மானாமதுரையில் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, செப்.14- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம், அன்ன வாசல் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் காளீஸ்வ ரன் சாதி வெறியர்களால் வெட்டிப் படுகொலை செய்யப் பட்டார். இதைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து கொலையாளி களையும் கைது செய்ய வேண்டும்; படுகொலை செய் யப்பட்ட காளீஸ்வரனின் சகோ தரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்டத் தலைவர் முத்து ராமலிங்கபூபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் செல்லக் கண்ணு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் கருப்பு சாமி, தியாகி இமானுவேல் பேரவை மாநில செயலாளர் வேல்முருகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவர் சாந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மானாமதுரை ஒன்றியச் செய லாளர் மாணிக்கம், சிபிஎம் திருப்புவனம் ஒன்றியச் செயலா ளர் ஈஸ்வரன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வழக்கறி ஞர் மதி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் அழகர் சாமி, திருப்புவனம் ஒன்றியச் செயலாளர் நீலமேகம் ஆகி யோர் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் முனியராஜ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் வீரய்யா  மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.