சனாதன வன்மத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் உச்சநீதிமன்ற நீதிபதி மீது காலணி வீசப்பட்ட சம்பவம்
தருமபுரி, அக்.10- உச்சநீதிமன்ற நீதிபதி மீது காலணி வீசிய சனாதனவாதியைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட இந்துத்துவா ஆர்.எஸ்எஸ் ராகேஷ் கிஸோரை ஒன்றிய அரசு கைது செய்ய வேண்டும். சாதிய - சனாதன வன்மத்தை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியினர் வெள்ளியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அமைப்பின் மாவட்டப் பொருளா ளர் வழக்கறிஞர் டி.மாதையன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.முத்து, மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், நிர்வாகிகள் ஏ.மாதேஸ்வரன், டி.எஸ்.ராமச் சந்திரன், பி.சங்கு, சி.காவேரி, என். வரதராஜன் ஆகியோர் கண்டன வுரையாற்றினர். இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.நாகரா சன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மாரி முத்து, மாதர் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.மல்லிகா, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கிருஷ்ணன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என். மல்லையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், பெருந்துறை பேருந்து நிலைய வளாகத்தில் வெள்ளியன்று மாலை ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைத்தலைவர் என்.பாலசுப்பி ரமணி தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் ஏ.கே.பழனிசாமி, பொருளாளர் மா.அண்ணாதுரை, சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர். அர்ஜூனன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரி முத்து, சமூக நீதி மக்கள் கட்சி வடி வேல் ராமன், திராவிடர் புரட்சிக் கழக மாவட்டச் செயலாளர் சௌந் தரபாண்டியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் பி.சுந்தர வடி வேலு, ஞா.ம.ராஜசேகரன், வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றறனர். முடிவில், சி.பழனி சாமி நன்றி கூறினார்.
