tamilnadu

img

செவ்வணக்கத்துடன் பிரியா விடை அளித்த தோழர்கள் கல்வியாளர் வே. வசந்தி தேவி உடல் அரசு மருத்துவமனையிடம் ஒப்படைப்பு

செவ்வணக்கத்துடன் பிரியா விடை அளித்த தோழர்கள் கல்வியாளர் வே. வசந்தி தேவி உடல்  அரசு மருத்துவமனையிடம் ஒப்படைப்பு

சென்னை, ஆக. 2 - கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்த மூத்த கல்வியாளர்- டாக்டர் வே. வசந்தி  தேவி, வெள்ளிக்கிழமை (ஆக.1) சென்னையில் காலமானார்.  வேளச்சேரி இல்லத்தில், பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பல்வேறு அரசியல்  கட்சித் தலைவர்களும் நேரில் சென்று  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி னர். அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர்  எஸ். வாலண்டினா, பொதுச்செயலா ளர் அ. ராதிகா, பொருளாளர் ஜி.  பிரமிளா, இந்திய மாணவர் சங்க மாநி லச் செயலாளர் கோ. அரவிந்தசாமி, அகில இந்திய துணைத் தலைவர் எஸ். மிருதுளா, தமுஎகச சைதை ஜெ, பேரா சிரியர் மாடசாமி உள்ளிட்ட ஏராளமா னோர் மலர் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து, சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை உடற்கூறியல் துறை யில், முனைவர் வே. வசந்தி தேவியின்  உடல் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலைப் பெற்றுக்கொண்ட மருத்து வக் கல்லூரி மருத்துவமனை அதிகாரி, டாக்டர் வே. வசந்தி தேவியின் மகள் அஜந்தாவிடம் உடல் தானத்திற்கான சான்றிதழை வழங்கினார். உடல் தானத்திற்கு துணையாக இருந்த குடும்பத்தினருக்கு பாராட்டும் தெரி வித்தார். முன்னதாக, நூற்றுக்கும் அதிகமா னோர் குழுமி, டாக்டர் வே. வசந்தி தேவியின் உடலுக்கு செவ்வணக்க முழக்கங்கள் எழுப்பியது, அவருக்கு பிடித்தமான ‘விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே...’ என்ற பாடலை இசைத்தும் பிரியா விடை அளித்தனர்.