tamilnadu

போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் - ஒப்பந்த முறைகளை கைவிட வேண்டும்! அரசை வலியுறுத்தி 16-ஆவது மாநில மாநாட்டில் தீர்மானம்

போக்குவரத்துத் துறையில் தனியார்மயம் - ஒப்பந்த முறைகளை கைவிட வேண்டும்!

அரசை வலியுறுத்தி 16-ஆவது மாநில மாநாட்டில் தீர்மானம்

தருமபுரி, ஆக. 8 - போக்குவரத்துத் துறையில் தனியார் மயம் மற்றும் ஒப்பந்த முறை களைக் கைவிட வேண்டும்; 2003, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழி யர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) கோரிக்கை  விடுத்துள்ளது. தருமபுரியில் ஆக. 5 முதல் 7 வரை  நடைபெற்ற 16-ஆவது மாநில மாநாட்டில்,  இதுதொடர்பாக தீர்மானமும் நிறை வேற்றப்பட்டு உள்ளது. புதுச்சேரி சாலைப்  போக்கு வரத்துக் கழகத் தொழிலா ளர்களின் நியாயமான கோரிக்கை களை, புதுச்சேரி அரசு உடனடியாக நிறை வேற்ற வேண்டும்; ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்; ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.  போக்குவரத்துத் துறையில் தனியார் மயம் மற்றும் ஒப்பந்த முறைகளைக் கைவிட வேண்டும். 2003, ஏப்ரல் 1-ஆம்  தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழி யர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; பேருந்து இயக்கத்தைச் சீர மைக்க, அனைத்துக் கழகங்களி லும் கட்டு்ப்பாட்டுப் பிரிவில் (Control Section) பரிசோதகர்களை நியமித்து முறைகேடுகளைத் தடுக்க வேண்டும். முறையாக விடுப்பு கேட்டு விண்ணப் பிக்கும் தொழிலாளர்களுக்கு விடுப்பை மறுப்பது, ஆப்சென்ட் போடுவது போன்ற  நடவடிக்கை களைக் கைவிட வேண்டும்.  தொழில்நுட்பப் பிரிவில் பேருந்து களுக்குத் தேவையான தரமான உதிரி பாகங்கள் மற்றும் நவீன சாதனங்களை வழங்க வேண்டும். பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கு வதை உறுதி செய்ய வேண்டும். ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், வாரிசுகளுக்கு அதிகபட்ச ஓய்வூதியம் என்ற முறையை மாற்றிய மைக்க வேண்டும். போக்குவரத்து ஊழியர் களுக்காக ஓய்வூதியர் இல்லங்களை அரசே உருவாக்க வேண்டும். சென்னை யில் தமிழ்நாடு அரசின் நிதியுதவியு டன் இயக்கப்பட வுள்ள 650 மின்சாரப்  பேருந்துகளை, நிரந்தரப் பணியாளர் களைக் கொண்டு இயக்க வேண்டும்; போக்குவரத்து ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முறை யாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் மாநில மாநாட்டில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பேரணி - பொதுக்கூட்டம் மாநாட்டின் நிறைவாக, வியாழ னன்று தருமபுரி போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன்பு துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக  செம்பட்டைப் பேரணி நடைபெற்றது. பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் தோழர் கே.எம். ஹரிபட் நினைவுத் திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  சிஐடியு மாநில செயலாளர் சி. நாக ராசன் தலைமையில் நடைபெற்ற இந்த  பொதுக்கூட்டத்தில், சம்மேளனத் துணைப் பொதுச்செயலாளர்கள் வி. தயா னந்தம், டி. ஜான்சன் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநிலத்  தலைவர் அ. சவுந்தரராசன், சம்மேளன  பொதுச்செயலாளர் கே. ஆறுமுக நயி னார், சிஐடியு மாவட்டச் செயலாளர்கள் பி.  ஜீவா (தருமபுரி), என். ஸ்ரீதர் (கிருஷ்ணகிரி) ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக தின்டுக்கல் சக்தி குழு வினரின் தப்பாட்டம், சென்னை விபிசி கலைக்குழு உத்தண்ட காளியப்பன் பாடல்கள், காம்ரேட் டாக்கீஸ் கேங் ஸ்டார்,  மதுரை கலைவாணர் கலைக்குழு கலை  நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வரவேற்புக் குழு பொருளாளர் சி. முரளி நன்றி கூறினார்.