தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
புதுக்கோட்டை, அக். 14- படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்.17 (வெள்ளிக்கிழமை) புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள், தங்களது சுயவிவர குறிப்பு. ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் ‘தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்’ www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை, அக். 14- 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் சரகம் ஊனையூர் சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் பெரிய கருப்பன் (22). இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவரது பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பெரிய கருப்பனைக் கைது செய்தனர். வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் முடிவில், நீதிபதி கனகராஜ் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். குற்றவாளி பெரிய கருப்பனுக்கு, போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். சிறைத் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்துள்ளார்.
சிபிஎம் தொடர் காத்திருப்பு போராட்டம் வெற்றி கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அரசு அலுவலர்கள் உறுதி
தஞ்சாவூர், அக். 14- குடிமனை, குடிமனைப் பட்டா இல்லாத அனைவருக்கும் குடிமனை வழங்க வேண்டும். புதுக்குளம் தெற்கு கரையி லிருந்து செல்லும் ரெட்டைக் குளம் வாரியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நெல்லடிக்காடு பகுதி பயனாளி களுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு கிளை சார்பில், நெல்லடிக்காடு கிராம நிர்வாக அலு வலர் அலுவலகம் முன்பு திங்கட்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா ளர் வி.ஆர்.கே. செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மூத்த தோழர் வீ.கருப்பையா, விவசாயத் தொழிலாளர் சங்கம் ஒன்றியச் செயலாளர் சி.சுந்தரம், ஒன்றிய துணைச் செயலாளர் வ.சிவனேசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்டக் குழு உறுப்பினர் தங்க. விஜயகுமார், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.மகாலிங்கம் உட்பட ஏராள மானோர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, பேராவூரணி வட்டாட்சி யர் அலுவலகத்தில் வட்டாட்சியர் நா.சுப்பிர மணியன் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மின்வாரிய அலுவலர்கள், வருவாய்த் துறையினர், சிபிஎம் நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, இரண்டு மாத காலத்தில் நிறைவேற்றித் தரப்படும் என அரசு அலுவலர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.