tamilnadu

img

ஏரியில் தனிநபர் ஆக்கிரமிப்பு: விவசாயிகள் தவிப்பு

ஏரியில் தனிநபர் ஆக்கிரமிப்பு: விவசாயிகள் தவிப்பு

ராணிப்பேட்டை, அக்.23- அரசு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி விவ சாயம் செய்ய வழிபாதை கேட்டு விவசாயிகள் பல மாதங்களாக அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். நெமிலி வட்டம், களத்தூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரி சர்வே எண் 741-ல் நீர்ப்பாசனம் செய்து விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். பட்டா வைத்துள்ள நில உரிமை விவசாயிகள் சிலர் பம்பு செட் மின் இணைப்பு பெற்று விவ சாயம் செய்து வருகின்றனர். விவ சாயிகள் அனைவரும் ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய் ஓரமாக பாதை அமைத்து விவ சாய இடுபொருட்கள், டிராக்டர், ஏர் உழவு மாட்டு வண்டிகள், அறு வடை இயந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஏரியில் பட்டா நில உரிமை இல்லாத லட்சு மணன், அவரது மகன்கள் பூபாலன், நந்தகுமார் ஆகிய மூவரும் இணைந்து நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து ஏரி புறம்போக்கு நிலம் மூன்று ஏக்கரை ஆக்கிரமித்து பயிர் செய்து வருவதாக கூறப்படு கிறது. இதனால் ஏரிக்கு வரும் நீர்வரத்து தடைபட்டு ஏரி முழுமை யாக நிரம்பமுடியாமல் சில மாதங்களில் வறண்டு வருகிறது. விவசாயிகள் இரண்டு போகம் பயிர் செய்ய முடியாமல் சிரமப்படு கின்றனர். ஏரியில் பட்டா நிலம் வைத்துள்ள விவசாய நிலத்திற்கு செல்லும் வழிபாதையை ஆக்கிர மித்து விவசாயிகளுக்கு வழி விடா மல் தொடர்ந்து பிரச்சனையில் ஈடு பட்டு வருவதாக கூறப்படுகிறது. மழைக்காலங்களில் ஏரியில் நீர் நிரம்புவதால் பட்டா உரிமை யாளர்கள் வழிபாதை இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஏரியில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி விவ சாயம் செய்ய வழிபாதை கேட்டு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். வியாழனன்று ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்நாள் கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் குறித்து விவசாய சங்க மாவட்ட செயலாளர் எல்.சி.மணி விளக்கினார்.