tamilnadu

img

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் பேரணி

சென்னை, செப். 29 - அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 6-8  ஆம் வகுப்பு மாணவர்க ளுக்கு காலை சிற்றுண்டி  வழங்க கோரி வெள்ளி யன்று (செப்.29) கோட்டை  நோக்கி பேரணி நடைபெற்றது.  தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி இந்த பேரணியை நடத்தி யது. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,  மாணவர்களின் நலன் கருதி எண்ணும் எழுத் தும் திட்டத்தை கைவிட வேண்டும், 2009 ஜூன் மாதத்திற்கு பிறகு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரி யர்களின் ஊதிய முரண் பாட்டை சரி செய்ய வேண்டும். பதவி உயர்வுக்கு தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து  மேல்முறையீடு செய்ய வேண்டும், கல்வி மேலாண் மைக் குழு தகவல்களை (இஎம்ஐஎஸ்) பதிவேற்றும் பணிகளில் இருந்து முழுமை யாக விடுவிக்க வேண்டும். மேலாண்மைக்குழு கூட்டத்தை 3 மாதத்திற்கு ஒரு  முறை மட்டுமே கூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து பல்லா யிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கூட்டணியின் மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந் தரராசன் தொடங்கி வைத்தார். பொதுச் செய லாளர் ச.மயில், பொருளா ளர் ஜீ.மத்தேயு, துணைப் பொதுச் செயலாளர் தா.கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரி யர் கழக பொதுச்செயலாளர் சே.பிரபாகரன், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பின் அகில இந்திய செயலாளர் அ.சங்கர் உள்ளிட்டு தோழமை சங்கத் தலைவர்கள் பேசினர்.இதனை தொடர்ந்து பள்ளி கல்வி துறைச் செயலாளர் காக்கர்லா உஷாவுடன்  சங்க தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.