தமுஎகச எழுத்தாளர் ஜீவகாருண்யன் எழுதிய ‘இறுதிப்படியிலிருந்து’ (மகாபாரதப் பாத்திரங்களை முன்வைத்து) சிறுகதைத் தொகுப்பு, ‘சிறந்த சிறுவர் கதைகள் 111’ ஆகிய நூல்கள் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப் பட்டன. பால புரஸ்கார் விருதுபெற்ற கவிஞர் மு. முருகேஷ் வெளியிட எழுத்தாளர் மயிலைபாலு, இயக்குநர் ராசி. அழகப்பன், ‘படித்துறை’ இளம்பரிதி, பொம்மலாட்டக் கலைஞர் கலைவாணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நிவேதிதா பதிப்பகத்தின் தேவகி ராமலிங்கம், எழுத்தாளர் ஜீவகாருண்யன் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர்.