tamilnadu

பப்ஜி மதன் வழக்கு ஒத்தி வைப்பு

சென்னை, மார்ச் 8 - யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசி  விளையாடியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன்  மீதான வழக்கு விசாரணையை 4 வாரங்க ளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. மதன்குமார் என்பவர் டாக்சிக் மதன் 18  என்ற யூடியூப் சேனல்களில் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாச மாக பேசி விளையாடினார். இது தொடர்பாக  அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல்,  தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன் படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவலர்கள் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்தாண்டு ஜூன் 18  ஆம் தேதி தர்மபுரியில் கைது செய்யப் பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில்  அடைக்கப்பட் டார். இவர் மீது ஏராளமான புகார்கள் வந்ததால், சைபர் சட்ட குற்றவாளியாக அறிவித்து ஜூலை 5 ஆம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்  சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பப்ஜி மதன் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சமூக வளைதளங்களில் ஆபாசமாக பேசு வது மிகவும் ஆபத்தானது. அதனால் தற்போது  வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடி யாது என தெரிவித்து வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.