tamilnadu

img

போலிச்சாமியாரின் சிவராத்திரியில் பங்கேற்காதீர்!

கோவை, பிப்.16- குற்றப்பின்னணி மற்றும் பல்வேறு விதி மீறல்கள் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடை பெறும் சிவராத்திரி விழாவில் குடி யரசு தலைவர் பங்கேற்க வேண்  டாம் என பல்வேறு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குடியரசு தலைவருக்கு தபால் அனுப்பும் இயக்கத்தில் வியாழனன்று ஈடு பட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறு கையில், கோவையில் ஈஷா யோகா மையம் அமைந்திருக்கிற பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை  பகுதியையொட்டிய பகுதியாகும். இங்குள்ள பழங்குடியின மக்க ளின் நிலங்களை ஏமாற்றி, பறித்து போலிச்சாமியார் ஜக்கி, ஈஷா  மையத்தை விரிவுபடுத்தியுள் ளார். மேலும், யானைகளின் வழித்  தடத்தை மறித்து பல்வேறு கட்டி டங்கள் கட்டப்பட்டுள்ளன.  இதுகுறித்து வருவாய்த்துறை சம்மன் அனுப்பப்பட்டு, நீதிமன்  றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஈஷா மையத் தில் பயிற்சிக்கு வந்த சுபஸ்ரீ என் கிற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்தும் விசா ரணை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற பல மர்ம மரணங்கள் இந்த ஈஷா மையத்தில் நடை பெற்று வருவதும், அது உள்ளூர் அளவில் மூடி மறைக்கப்படுவதும் தொடர்கிறது.  இத்தகைய குற்றப்பின்னணி உள்ள மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் இந்திய நாட்டின் முதல் குடிமகளான குடி யரசுத் தலைவர் பங்கேற்பது ஏற்பு டையதல்ல. இது போலிச்சாமி யாரின் குற்றப்பின்னணி தொடர்பு டைய வழக்குகளை நீர்த்துப் போகச் செய்யும்.  ஆகவே, குடியரசு தலைவர் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்று வரவேற்கிற அதே நேரத் தில், ஈஷா யோகா மையத்திற்கு  செல்ல வேண்டாம் என்கிற வேண்டு கோளை முன்வைத்து குடியரசு தலைவர், திரௌபதி முர்மு அவர்களுக்கு கடிதம் அனுப்பும் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தபால் அனுப்பும் இயக்கத் தில், கோவையில் உள்ள மார்க் சிய, பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்புகள் மற்றும் சூழலிய அமைப்புகள் பங்கேற்றன.  முன்னதாக, கோவை தலைமை தபால் நிலையத்தில் குடி யரசு தலைவர் மாளிகைக்கு இ- தபால் வியாழனன்று அனுப்பப் பட்டது.  இந்நிகழ்விற்கு தபெதிக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன் தலைமை தாங்கி னார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலை வர்கள் பங்கேற்றனர். விசிக, ஆதித்தமிழர் கட்சி, தீண் டாடமை ஒழிப்பு முன்னணி, திவிக, திராவிடர் தமிழர் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம், மாதர் சங்கம், மாண வர் சங்கம், வாலிபர் சங்கம், வெள்  ளிங்கிரி மலை பழங்குடி மக்கள் பாதுகாப்பு சங்கம், வெள்ளிங்கிரி பாதுகாப்பு  இயக்கம், திராவிட மக்கள் இயக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட  பல்  வேறு இயக்கங்களின் தலை வர்கள் மற்றும் மலைவாழ் மக்கள்  சங்க பிரதிநிதிகள் ஆகியோர்  பங்  கேற்றனர்.