ஆட்டோ-கார் ஓட்டுநர்களுக்கு, பூம்புகார் எம்எல்ஏ தீபாவளி பரிசு
டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ-கார் ஓட்டுநர்களுக்கு தீபாவளிப் பண்டிகையையொட்டி, புத்தாடை, இனிப்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினார். திருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோவில், பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் மற்றும் இனிப்பு உள்ளிட்ட பரிசுகளை சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் வழங்கி, தீபாவளி வாழ்த்துக்களை கூறினார். திருக்கடையூர் பகுதியில் உள்ள ஓட்டுநர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சியில், செம்பனார்கோவில் மத்திய ஒன்றியச் செயலாளர் அமுர்த விஜய குமார், தெற்கு ஒன்றியச் செயலாளர் அப்துல்மாலிக் மற்றும் திமுக நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உடனிருந்தனர்.
