tamilnadu

img

பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும் பொன்னமராவதி ஒன்றிய மாநாடு கோரிக்கை

பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும் பொன்னமராவதி ஒன்றிய மாநாடு கோரிக்கை

பொன்னமராவதி, ஆக. 24-  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதுக்கோட்டை பொன்னமராவதி ஒன்றிய எட்டாவது மாநாடு காரையூரில் ஒன்றியத் தலைவர் எம். ராமசாமி தலைமையில் நடைபெற்றது.  பொருளாளர் சுப்பையா செங்கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் மதியரசி, விதொச பொறுப்பாளர் நல்லதம்பி, சிவசுப்பிரமணியன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.  ஒன்றியத்தின் தலைவராக ஏ.சௌந்தரராஜன், செயலாளராக சி.பாண்டியன், பொருளாளராக பி.சுந்தரராஜன் மற்றும் எட்டு பேர் கொண்ட ஒன்றியக் குழுவினரை அறிமுகம் செய்து, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன் நிறைவுரையாற்றினார்.  மாநாட்டில் பஞ்சமி நிலத்தை மீட்டு எடுப்பது, 1963 ஆம் ஆண்டு நிலம் ஒழிப்பு மற்றும் ரயத்து வாரி சட்டத்தின்படி பட்டியல் செய்யப்பட்டுள்ள நிலங்களை கண்டறிந்து நேரடியாக விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசு தனி ஆணையத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.