சினிமா பாணியில் அரசியல் கரூர் துயரத்தின் மூல காரணம்
சட்டப்பேரவையில் சிபிஎம் தலைவர் நாகை மாலி வேதனை
சென்னை, அக்.15 - செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடந்த துயரமான சம்பவம் இந்திய அரசியல் வரலாற்றில் நடை பெறாத ஒரு கொடுமையான நிகழ்வா கும். யாரும் எதிர்பாராத இந்த சோகத் தைப் பற்றி தமிழ்நாடு சட்டப்பேரவை யில் புதனன்று நடந்த விவாதத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை மாலி வேதனையுடன் பல அம்சங்களை குறிப்பிட்டார். அவரது உரையின் பகுதிகள் வருமாறு: நேரடி விசாரணையில் தெரிந்த உண்மைகள் அக்டோபர் 3-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தலைமையில் ஒரு குழுவினர் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விசாரித்தோம். அந்த சந்திப்பில் குறிப்பிடத்தக்க ஒரு விஷ யம் - ஒருவர் கூட அரசையோ, முத லமைச்சரையோ, காவல்துறையை யோ, அரசு நிர்வாகத்தையோ குறை சொல்லவில்லை என்பதுதான். துயரத்தின் மூன்று முக்கிய காரணங்கள் 1. நடிகரைக் காண வந்த கூட்டம் : முதல் காரணம், அரசியல் கட்சித் தலை வரை பார்க்க வரவில்லை; மக்கள், நடிகரைப் பார்க்கவே வந்தார்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 13 வயது சிறுவனிடம் ஏன் அந்தக் கூட்டத்திற்கு சென்றாய் என்று கேட்ட போது, அவன் சொன்ன பதில் அதிர்ச்சியளிக்கிறது. “திரைப்படத்தில் நல்லா டான்ஸ் ஆடுவார், அது எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நேரில் எப்படி இருப்பார் என்று பார்க்க வேண்டும் என்பதற்காக போனேன்” என்றான் அந்த சிறுவன். 2. உணவும் தண்ணீரும் இல்லாமல்: இரண்டாவது காரணம், தலைவர் மணிக்கணக்கில் தாமதமாக வரு கிறார். அவருக்காக ஏழு மணி நேரமாக கூட்டம் காத்திருக்கிறது. சாலை களில் காத்திருந்த மக்களுக்கு உண வும் இல்லை, தண்ணீரும் கிடைக்க வில்லை. ஆனாலும் அந்த நடிகரைப் பார்க்க வேண்டும் என்கிற பதற்றத்தில் அவ்வளவு நேரம் காத்திருந்தனர். 3. சினிமா படக்காட்சியைப் போன்ற வருகை : மூன்றாவது காரணம், பாரம்பரிய அரசியல் கட்சித் தலை வர்கள் போல வராமல், சினிமா பாணி யில் திட்டமிட்டு வந்தது. வாகனத்தில் ஒரு லைட்டை எரிய விடுகிறார்கள், அவர் முகம் மட்டும் தெரிகிறது. பிறகு வெளிச்சத்தை நிறுத்துகிறார்கள். லைட்டை ஆன் செய்வது, ஆஃப் செய்வது என்று ஒரு சினிமா படக் காட்சியே நடந்தது. பின் பக்கத்தில் இருந்த மக்கள் நடிகரை பார்க்க முடி யாமல் முன் பக்கம் முண்டி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அரசியலில் முதிர்ச்சியற்ற தலைமை அரசியல் தெரியாத, தெரிந்து கொள்ளும் மனநிலையிலும் இல்லாத ஒரு நடிகர், சினிமா பாணியை மட்டுமே வைத்துக்கொண்டு கட்சியை நடத்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று வந்திருக்கிறார். அரசியலில் முதிர்ச்சி யற்ற தலைவர்கள், பக்குவமற்ற கூட்டம் - இதுதான் நிஜம். ஒரு அரசியல் கட்சி என்றால் முதல் தலைமை, இரண்டாம் கட்ட தலைமை, மூன்றாம் கட்ட தலைமை என்று இருக்கும். அப்படி எதுவும் அந்த கட்சியில் இல்லை. கரூரில் கூட்டம் திரண்டிருந்த ஒரு இடத்தில், மாடி வீட்டின் தகர கூரையின் மீது நடிகரை பார்க்க வந்த கூட்டம் ஏறியது. அந்த கூரை இடிந்து விழுந்த தில் அதன் கீழே இருந்தவர்கள் படு காயமடைந்தனர். ஆனால் இதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், எப்படியும் நடிகரை பார்க்க வேண்டும் என்பதில் மட்டுமே கூட்டம் ஓடிக் கொண்டே இருந்தது. முதல்வருக்கு பாராட்டு கரூர் சம்பவத்தை அறிந்த அடுத்த நிமிடமே புறப்பட்டு, முத லமைச்சர் நிகழ்விடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கைகளை விரைவு படுத்தினார். முழு அரசு எந்திரத்தை யும் திறம்பட முடுக்கிவிட்டார்; மருத்து வத் துறை மேற்கொண்ட பணிகளை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்ட லாம். இந்த துயரமான சம்பவத்தை அரசு இயந்திரம் மிகவும் சாதுரிய மாக கையாண்டது என்பதை எமது கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி வெகுவாக பாராட்டினார். சிபிஐ விசாரணை கரூர் சம்பவ விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் முழு உண்மையும் வெளிக் கொண்டு வரப்படும் என்று நம்பு வோம். உண்மை நிலையை தமிழ் நாட்டுக்கு கொண்டு வர வேண்டும். வேடிக்கையான வெளிநடப்பு கரூர் சம்பவத்திற்காக பிரதான எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. எந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்று யாருக்குமே தெரியவில்லை. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிக்குத் தான் பங்கு அதிகம் இருக்கிறது. பேர வையில் முழுமையாக கடைசி வரைக்கும் இருக்க வேண்டும், விவாதிக்க வேண்டும். ஆனால் என்ன காரணம் என்று தெரியாமல் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறார்கள். இதற்குப் பெயர் வெளி நடப்பு அல்ல, இது எதிர்க்கட்சி அல்ல, ஒரு எதிரிக்கட்சி போன்று உள்ளது. இவ்வாறு நாகைமாலி பேசினார். இந்த விவாதத்தில் கு.செல்வ பெருந்தகை, ஜி.கே.மணி, நயினார் நாகேந்திரன், எஸ்.எஸ்.பாலாஜி, டி.ராமச்சந்திரன், எச்.எம்.ஜவா ஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், தி.வேல் முருகன் உள்ளிட்டோரும் பேசினர்.
