tamilnadu

img

விதிமுறை மீறல் புகார் போலீஸ் எஸ்.பி. ஆய்வு நடத்தி நட்டாலம் கல்குவாரியை மூட உத்தரவு

விதிமுறை மீறல் புகார் போலீஸ் எஸ்.பி. ஆய்வு நடத்தி  நட்டாலம் கல்குவாரியை மூட உத்தரவு

நாகர்கோவில், அக். 4- விதிமுறை மீறல் புகாரால் கன்னியா குமரி மாவட்டம் நட்டாலம் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சனிக் கிழமையன்று திடீர் ஆய்வு மேற் கொண்டார். குவாரி அனுமதிகள் மற்றும் சுற்றுச் சூழல் விதிமுறைகள் பின்பற்றப்பட வில்லை என முன் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.ஆய்வின்போது தேவையான ஆவ ணங்கள் மற்றும் அனுமதி சான்றிதழ்கள் சரிவர இல்லாதது தெரியவந்தது.  இதையடுத்து, முறையான ஆவ ணங்கள் சமர்ப்பிக்கும் வரை குவாரி மூடப்படும் என்றும் சட்டவிரோத குவாரி களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்ச ரித்தார். முறையான ஆவணத்தை சமர்ப்பி க்கும் வரை குவாரியை மூடுவதற்கு நடவ டிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியா கியுள்ளது.