tamilnadu

img

ஆம்புலன்சுகளுக்கு பூட்டு போட்டு காவல்துறையினர் அராஜகம்

ஆம்புலன்சுகளுக்கு பூட்டு போட்டு   காவல்துறையினர் அராஜகம்

வேலூர், ஆக.29- வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெறு வதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். எப்போதும் பர பரப்பாக காணப்படும் ஆற்காடு சாலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் சிலர் தங்களது கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் ஆற்காடு  சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவ்வழியாக செல்பவர்கள் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். இந்த சாலையோரம் நிறுத்திவிட்டு  செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை எடுக்க முடியாதவாறு பூட்டு போட்டு அபராதம் விதிக்கின்றனர்.  இந்நிலையில் மருத்துவமனை அருகே தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் நிறுத்தம் அமைத்து இயக்கி வந்தனர். வியாழனன்று (ஆக.28) அங்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் சாலையில் போக்கு வரத்து இடையூறாக நிறுத்தி இருந்த வாகனங்களை விட்டுவிட்டு மருத்துவ சேவைக்காக சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த தனியார் ஆம்புலன்சுக்கு  பூட்டு போட்டனர். இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்  நோயாளிகளை ஏற்றி செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. போக்குவரத்து காவலர்களின் இச்செயலை கண்டித்து  ஆம்புலன்ஸ் டிரைவர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு சிஐடியு மாவட்ட தலைவர் முரளி சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கேசவன், அண்ணாதுரை (ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கம்) காவலர்களிடம் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடை யூறு இல்லாமல் நாங்கள் நிறுத்தியுள்ள வாகனங்களுக்கு எதற்காக  பூட்டு போடு கிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு தனியார் மருத்துவமனை அழுத்தம் கொடுத்ததால் இவ்வாறு செய்தோம். மேலும் நீங்கள் இங்கு ஆம்புலன்ஸ் நிறுத்த கூடாது உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று தெரிவித்த னர். பின்னர் சங்க நிர்வாகிகள் காவல்துறை யினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அதனை அகற்ற முன்வரவில்லை.எனவே உடனடியாக வாகனங்களில் போடப்பட்ட பூட்டை அகற்றாவிட்டால் சனிக்கிழமையன்று  (ஆக.30) போராட்டம் நடத்தபோவதாக கூறினர்.