tamilnadu

img

பட்டியலின மக்கள் மீது காவல்துறை அராஜகம் திருவில்லிபுத்தூரில் சிபிஎம் போராட்டம்

பட்டியலின மக்கள் மீது காவல்துறை அராஜகம் திருவில்லிபுத்தூரில் சிபிஎம் போராட்டம்

திருவில்லிபுத்தூர், செப்.26- திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு  உட்பட்ட பி.ராமச்சந்திரா புரம் பழைய செந்நெல் குளம் கிராமத்தில் சமுதா யக் கூடம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வது தொடர்பாக மக்கள் விருப்ப த்தை புறக்கணித்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் பட்டியலின மக்கள் போராட்டம் நடத்தினர். சுமார் 100 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராம மக்க ளில் பெரும்பான்மையினர் பட்டியலினத்தைச் சேர்ந்த வர்கள். மக்கள் விருப்பப்படி அரசு புறம்போக்கு நிலம் (புல எண்:188/2) தேர்வு  செய்யப்பட வேண்டிய நிலையில், ஊராட்சி நிர்வாகம் வேறு இடத்தில் (புல எண்:162/2) பணிகளைத் தொடங்கிய தால் மக்கள் இரண்டு மாதங் களாக மனு அளித்து வந்த னர். நடவடிக்கை எடுக்காத தால் வெள்ளியன்று இராஜ பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. போராட்டத்திற்குச் சென்ற மக்களை வன்னி யம்பட்டி காவல்துறை தடுத்து நிறுத்தியது. பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டது. இதற்கு சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஏ.குருசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். போராட்டத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.சசிகுமார், ரவி, ராமராஜ், காட்டுராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலி யுறுத்தியும், காவல்துறை யின் அராஜக நடவடிக்கை க்கு கண்டனமும் தெரி விக்கப்பட்டது. பின்னர், இராஜபாளை யம் வட்டாட்சியர் அலுவல கம் இன்று (27.09.25) மாலை அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி யளித்ததால், போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. சம்பவத்தை அறிந்த  மாநில செயற்குழு உறுப்பி னர் கே.அர்ஜுனன், நகரச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கிராம மக்களை நேரில் சந்தித்து விபரம் கேட்டறிந்தனர்.