கவிஞர் ஜீவி-க்கு ‘சௌமா’ இலக்கிய விருது
அறந்தாங்கி, ஆக. 24- மணப்பாறையில் செயல்படும் சௌமா இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் வெளிவரும் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வரு கிறது. அதன்படி கவிஞரும், பிரபல பட்டி மன்ற பேச்சாளருமாகிய கவிஞர் ஜீ.விக்கு, அவர் எழுதிய ஜீவி கவிதைகள் என்ற நூலுக்காக சிறப்பு விருது வழங்கப்பட்டது. மணப்பாறையில் நடந்த நிகழ்வுக்கு சௌமா தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். கவிஞர் தேவேந்திர பூபதி, பேராசிரியர் ரவிக்குமார், லயன்ஸ் சங்க பிரமுகர்கள் சிறப்புரையாற்றினர். சௌமா ஒருங்கிணைப்பாளர் கவிஞர் தமிழ் மணவாளன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். ஜீ.வி உட்பட 28 எழுத்தாளர்கள் கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கல்வியாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்ற னர். நேசமணி நன்றி கூறினார்.
