tamilnadu

img

ஐடிடி, ஐஆர்டி விண்ணப்பங்களை பரிசீலித்து நடவடிக்கை எடுத்திடுக!

டிஆர்இயு கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சிராப்பள்ளி, செப்.2 - ஐடிடி/ஐஆர்டி வெளி மாநில தொழி லாளர்கள் 10 ஆண்டுகள் பணி செய்த  பின்பும் தங்களுடைய சொந்த ஊருக்கு  செல்ல முடியாமல் தவிக்கின்றனர்; ஐடிடி/ஐஆர்டி விண்ணப்பங்களை ரிஜிஸ்டர் செய்ய நிர்வாகம் மறுக் கிறது; காலியிடங்களை நிரப்ப ஆர்ஆர்பி இன்டெண்ட் போடும்போது ஐடிடி/ ஐஆர்டி பதிவு செய்தவரின் எண்ணிக்கைக்கு ஏற்ப போஸ்ட்களை கேட்டு வாங்க தென்னக ரயில்வே நிர்வாகம் மறுக்கிறது. காலி இடங்களை அவுட்சோர்சிங், காண்ட்ராக்ட், ரீ என்கேஜ்மெண்ட் போன்றவைகள் மூலம் மட்டுமே நிரப்பு வதற்கு ஆர்வம் காட்டும் பொது மேலாளர் நிர்வாகம், காலியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதற்கு நடவ டிக்கை எடுக்க மறுக்கிறது; அதிகப்படி யான காலியிடங்கள் காரணமாக ஜிடிசிஇ மூலம் தேர்வு செய்யப்பட்ட வர்களை விடுவிக்க போராட வேண்டி யுள்ளது. இவற்றை கண்டித்தும், ஐடிடி/ ஐஆர்டி விண்ணப்பங்களை பரிசீலித்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்; காலி யிடங்களை அவுட்சோர்சிங், காண்ட் ராக்ட், ரீஎன்கேஜ்மெண்ட் மூலமாக நிரப்பக் கூடாது; ஐடிடி/ஐ ஆர்டி கொடுத்த விண்ணப்பங்களின் நிலையை அறிய அனைத்து விண்ணப்பங்களை யும் பதிவு செய்து சீனியாரிட்டி பொசி ஷன் வெளியிட வேண்டும்; புதிய ஆர்ஆர்பி பேப்பர்ஸ் வரும்போது இரண்டுக்கு ஒன்று என்ற சதவீத அடிப்ப டையில் ரிலீவ் செய்ய வேண்டும் என்பன  உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தியும் டிஆர்இயு திருச்சி கோட்டம் சார்பில் திருச்சி டிஆர்எம் அலு வலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு டிஆர்இயு கோட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை  வகித்தார். கோட்ட செயலாளர் கரி காலன், உதவி பொதுச் செயலாளர் ராஜா, கோட்ட உதவி தலைவர் பலராம்,  உதவி கோட்டச் செயலாளர் ரஜினி, உதவி செயலாளர் ஷேக் இப்ராஹிம் ஆகியோர் பேசினர்.

உதவி என்ஜின் ஓட்டுநர் காலிப் பணியிடங்களை  ரயில்வே தேர்வு வாரியம் மூலம் நிரப்ப கோரிக்கை

உதவி என்ஜின் ஓட்டுநர் காலிப் பணியிடங்களை ரயில்வே தேர்வு வாரியம்  மூலம் தாமதமின்றி நிரப்ப வேண்டும். ரயில் என்ஜின் ஓட்டுநர்கள், உதவி  ஓட்டுநர்கள் உள்ளிட்ட ஓய்வுபெற்ற ஓடும் தொழிலாளியை மீண்டும் பணியமர்த்தும்  முடிவை கைவிட வேண்டும். 46 மணி நேர ஓய்வை வழங்க வேண்டும். தொடர் இரவு  பணியை இரண்டாக குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர்கள் கழகம் மற்றும் டிஆர்இயு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் ஓடும் தொழிலாளர் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் பாக்கியராஜ் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி கோட்டச் செயலாளர் கண்ணையன், டிஆர்இயு கணேசன் ஆகியோர்  பேசினர். இதில் ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள், உதவி ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.