சென்னை,நவ.17- மாமல்லபுரம்-மரக்காணம் வரை கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்த 5 ஆயிரம் மரங்கள் வெட்டப்படுகின்றன. மாமல்லபுரத்திலிருந்து மரக்காணம் வர 62 கி.மீ. தூரத்தக்கு கிழக்கு கடற்கரை சாலை அகலப்படுத்தப்படுகிறது. அதற்கான திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வகுத்துள்ளது. இங்கு 4 வழி, 6 வழி மற்றும் 8 வழிச்சாலைகளாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக ரூ.1802 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நில ஆர்ஜி தம், கட்டுமானப் பணி உள்ளிட்ட செலவு பணிகள் இதில் அடங்கும். கிழக்கு கடற்கரை சாலை யில் பல இடங்களில் வளைவுகள் உள்ளன. இதனால் அடிக்கடி விபத்துகளும் அதனால் உயி ரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதை தடுக்கவே இந்த சாலை அகலப்படுத்தப்படுகிறது. இந்த சாலையில் 6 பெரிய பாலங்கள், 9 சிறிய பாலங்கள், 14 சுரங்கப் பாலங்கள், இலகு ரக வாகனங்கள் கடந்து செல்ல வசதியாக 8 சுரங்கப் பாலங்கள், 2 சுங்கக் கட்டணம் செலுத்தும் மையங்கள், 34 பஸ் நிழற்குடைகள், 2 லாரி நிறுத்தும் இடங்கள் மற்றும் ஒரு பேருந்து நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது. இந்த சாலை விரிவாக்கத்துக்கு கிழக்கு கடற்கரை சாலையில் நன்கு வளர்ந்துள்ள 5 ஆயி ரம் மரங்கள் வெட்டப்படுகின்றன. முதற்கட்டமாக மாமல்லபுரத்தில் இருந்து முகையூர் வரை சாலை அகலப்படுத்தப்படுகிறது. அங்கு 3,319 மரங்கள் வெட்டப்படுகின்றன. 2-வது கட்டமாக முகையூரில் இருந்து மரக்காணம் வரை சாலை அகலப்படுத்தப்படு கிறது. இப்பகுதியில் 1,560 மரங்கள் வெட்டப் படுகின்றன. இவற்றில் 637 சதுப்பு நில மரங்களும் வெட்டப்பட உள்ளன. இந்த சாலையை அகலப் படுத்த கடற்கரை ஒழுங்கு மண்டலத்துக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் மதிப்பீடு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.