லக்னோ, ஜன.24- உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது துவங்கி இதுவரை 3 அமைச்சர்கள் உள்பட சுமார் 12-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் பாஜக-வில் இருந்து விலகி உள்ளனர். இவர்களில் ஜிதேந்திர வர்மாவும் ஒருவராவார். ஞாயிறன்று பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த கையோடு சமாஜ்வாதியில் இணைந்த இவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “நான் பாஜக-வுக்காக உழைத்தேன். ஆனால் அதையும் மீறி எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்துள்ளனர். ஆரம்பத்தில் இவர்கள் என்ன கூறினார்கள்..?
‘இளைஞர்களை ஊக்குவிப்போம்’ என்றார்கள். ஆனால் 75 வயது பெரியவருக்கு டிக்கெட் கொடுத்திருக்கிறார்கள்.. சொல்வது ஒன்றும் செய்வது வேறொன்றுமாக உள்ளார்கள். உத்தரப் பிரதேசத்தில் இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சிதான் வெற்றி பெறப் போகிறது. மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் போகிறது. உத்தரப்பிரதேச மக்கள் நலனுக்காக நாங்கள் பாடுபடுவோம்” என்று கூறியுள்ளார்.