திருவனந்தபுரம், மே 22- ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீது ஏற்கனவே உயர்த்திய வரியை ஓரளவு குறைத்துள்ளதால், கேரள அரசும் பெட்ரோல் மீதான வரி குறைத்துள்ளதாக. அம்மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்தார். ஒன்றிய அரசின் வரிகுறைப்பு நடவடிக்கையை வரவேற்பதாகவும், அதன் ஒரு பகுதியாக பெட்ரோல் மீதான மாநில வரியில் ரூ.2.41, டீசலில் ரூ.1.36 குறைப்பதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.