tamilnadu

img

அரசுப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கேட்டு அமைச்சரிடம் மனு

அரசுப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கேட்டு அமைச்சரிடம் மனு

நாமக்கல், ஜூலை 13- குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்கள், வகுப்பறை கட்டடங் கள், கழிவறை வசதிகள் கேட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மக ளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,700 மாணவிகள் படித்து வருகின்றனர். குமாரபாளையத்தில் இயங்கி வந்த அரசு உதவி பெறும் மகளிர் பள்ளி, இந்த  கல்வியாண்டு முதல் செயல்படாததே, அரசுப்பள்ளியில் அதிக மாணவிகள் சேருவதற்கு காரணமாகவும் உள் ளது. மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக  ஆசிரியர்கள், வகுப்பறைகள், கழிவறை வசதிகள் இல் லாமல் பள்ளியை நிர்வாகம் செய்வதில் மிகுந்த சிர மம் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவிகள் மற்றும் பெற் றோர்களின் கோரிக்கையை ஏற்று, காலியாக  உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  வகுப்பறை கட்டடங்கள், கழிவறைகள் அமைத்துத்தரக் கோரி, சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் குமாரபாளை யம் நகர்மன்றத் தலைவர் விஜய்கண்ணன், துணைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் மனு அளித்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி யளித்தார்.