பணியின் போது உயிரிழப்பு இழப்பீடு வழங்காத உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்ய கோரி மனு
கரூர், ஆக.27 - கிணற்றுக்குள் மின் மோட்டார் கட்டி இழுக்கும் போது, கயிறு அறுந்து கிணற்றில் விழுந்து உயிரி ழந்த ராஜ்குமாரின் குடும்பத்தின ருக்கு, ஒரு வருடமாக இழப்பீடு வழங்காத உரிமையாளர் மீது, வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்கு பதிய வேண்டும் என தலித் விடுதலை இயக்கம் சார்பில் பாதிக்கப் பட்ட குடும்பத்துடன் வந்து, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் பி.கருப்பையா தலைமையில், மாவட்ட ஆட்சியரி டம் வழங்கிய கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், ஜமீன் ஆலமரத்துப்பட்டி அருகில் உள்ள ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (37). இவர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த வர். இவருடன் அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ், பழனிசாமி ஆகியோர், கடந்த 10.6.2024 அன்று ஆண்டிப்பட்டிக் கோட்டையில் உள்ள ஆலமரத்துப் பட்டியைச் சேர்ந்த வாங்கிலியப்பன் என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரது தோட்டத்து கிணற்றில், மின் மோட்டார் பழுதானதை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது, மின் மோட்டாரை கிணற்றுக்குள் இறங்கி மேலே ஏற்றும்போது கயிறு அறுந்து கிணற் றுக்குள் இருந்த ராஜ்குமார் மீது மோட்டார் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக கிணற்றின் உரிமையா ளர் மீது நடவடிக்கை எடுத்து, உயிரி ழந்த ராஜ்குமார் குடும்பத்தின ருக்கு இழப்பீடுத் தொகை கேட்டு அரவக்குறிச்சி காவல் நிலை யத்தில் புகார் மனு கொடுத்தனர். ஆனால் ஓராண்டாகியும் அரவக் குறிச்சி காவல்துறையினர் இது வரை எந்த நடவடிக்கையும் கிணற் றின் உரிமையாளர் வாங்கிலியப்பன் மீது எடுக்கவில்லை. மேலும் இது தொடர்பாக விசாரித்து, கூலி வேலை செய்து வரும் ராஜ்குமாரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு, எந்தவித இழப்பீடு தொகையும் இன்று வரை கொடுக்கவில்லை. எனவே, ராஜ்குமாரின் உயிரி ழப்புக்கு காரணமான வாங்கிலியப் பன் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளனர்.