பரவலாக பயன்படுத்தப்படும் பல பூச்சிக்கொல்லிகள் விந்தணுக்களின் அடர்த்தியை குறைக்கிறது. ஆண்களின் இனப்பெருக்கத் திறனை பாதிக்கிறது என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்க ஆய்வு கூறுகிறது. அங்கக பாஸ்பேட்டுகள் (organophosphates) மற்றும் கார்போமேட்டுகள் (carbamates) போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பூச்சிக்கொல்லிகளில் அடங்கியுள்ள நச்சு வேதிப்பொருட்கள் ஆண்களின் குழந்தை பெறும் திறனில் ஏற்படுத்தும் பாதிப்பு பற்றி ஜார்ஜ் மேசன் (George Mason) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். மலட்டுத்தன்மையும் பூச்சிக் கொல்லிகளும் கடந்த ஐம்பதாண்டில் வெளி யிடப்பட்ட ஆய்வு விவரங்கள் இதற் காக ஆராயப்பட்டன. இந்த புதிய ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன் றில் ஒரு பகுதியினர் உணவு, மற்ற சூழல் தொடர்புகளால் ஏற்பட்ட நச்சுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். “பூச்சிக்கொல்லிகளுக்கும் ஆண்களின் மலட்டுத்தன்மைக்கும் நேரடியான நெருங்கிய தொடர்பு இருப்பது மெட்டா ஆய்வு விவ ரங்கள் மற்றும் ஆய்வில் பங்கேற்ற 1,800 பேரிடம் நடத்தப்பட்ட பரி சோதனைகளில் இருந்து கண்ட றியப்பட்டது” என்று ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக பொது ஆரோக்கி யப் புலத்தின் தலைவரும் ஆய் வுக்கட்டுரையின் இணை ஆசிரியரு மான மெலிசா பெர்ரி (Melissa Perry) கூறுகிறார்.
ஐம்பதாண்டில் 50%
இந்த நச்சுப்பொருட்கள் ஒட்டு மொத்த விந்தணு அடர்வையும் குறைக்கிறது. குழந்தை பெற விரும்பும் ஆண்கள் பூச்சிக்கொல்லி களுடனான நேரடி தொடர்பைத் தவிர்ப்பதே இதற்கு தீர்வு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உலகில் எல்லா நாடுகளிலும் விந் தணுக்களின் தரம் மற்றும் அதன் அடர்வு வெகுவாக குறைந்துவரும் நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் பூச்சிக்கொல்லி பயன்பாடு பற்றிய கவலையை அதிகரித்துள்ளது. கடந்த ஐம்பதாண்டில் விந்தணு அடர்த்தி 50% குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
நோய்களை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லி வேதிப்பொருட்கள்
அமெரிக்க வயல்களில் ஆண்டு தோறும் 15 மில்லியன் பவுண்டு அங்க கப் பாஸ்பேட்டுகள் தெளிக்கப்படு கின்றன. இந்த பொருட்களின் வேதி உற்பத்தியில் பயன்படும் செயல் முறையால் (chemical formula) புற்றுநோய் ஏற்படுகிறது. குழந்தைப்பருவத்தில் தோன்றி பின் வாழ்நாள் முழுதும் நீடிக்கும் முழுமையாக குணப்படுத்த முடி யாத ஆனால் சிகிச்சைகள் மூலம் நிலைமையை மேம்படுத்த வசதி களை மட்டுமே உடைய கவனச் சிதைவு அல்லது அதிதீவிர செயல்பாடுகள் (Attention Deficit&Hyper activity Disorder ADHD) மற்றும் ஆட்டிஸம் ( autism) போன்ற நரம்பியல் குறைபாடுகளை இந்த நச்சு வேதிப்பொருட்கள் கரு வுற்றிருக்கும்போதே பெண்களுக்கு ஏற்படுத்துகின்றன.
உற்பத்தி நிலையிலேயே நச்சுத்தன்மையுடைய பொருட்கள்
இந்த வகை பூச்சிக்கொல்லிகள் புல்வெளிப்பரப்புகள் மற்றும் வீட்டின் உட்பகுதிகளிலும் பயன்படுத்தப்படு கின்றன. நரம்பியல் கோளாறு களை ஏற்படுத்தும் நரம்பியல் சமிஞ்ஞைகளை ஒழுங்குபடுத்தி அவற்றை உடல் முழுவதும் அனுப்பு வதற்கு பொறுப்பாக பூச்சிகளின் உடலில் இருக்கும் ஒரு நொதியை சேதப்படுத்துவதன் மூலம் இந்த பொருட்கள் பூச்சிக்கொல்லிகளை அழிக்கின்றன. உற்பத்தி நிலையி லேயே நச்சுத்தன்மை வாய்ந்த இவை உயிர்களைக் கொல்ல தயாரிக்கப் படுகின்றன.
விந்தணுக்களுக்கு உருவாகும் பாதிப்பு
ஆனால் இவை பெரிய உயிரி னங்களுக்கு மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடி யவை. இவை மனித உடலில் நாள மில்லா சுரப்பி மண்டலத்தில் நுழைந்து ஹார்மோன்களின் செயல்பாட்டில் குறுக்கிடுகின்றன. இதனால் ஆணின் உடலில் விந்த ணுக்களின் இயல்பான சுரப்பு மற்றும் அதன் அளவை இவை நேரடியாக பாதிக்கின்றன. நாளமில்லா சுரப்பி மண்டலத்தின் ஒரு பகுதியான ஆணின் டெஸ்ட்டிஸ் செல்கள் பாதிப்படைகின்றன. மூளையில் இனப்பெருக்கத்திற்கு பொறுப்பான நரம்பியல் சமிக்ஞைகளின் இயக் கத்தை மாற்றுகின்றன. உலகை பாதிக்கும் பொது ஆரோக்கியப் பிரச்சனை விவசாயப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களே இவ்வகை நச்சு களால் அதிகம் பாதிக்கப்படு கின்றனர். இது பற்றிய ஆய்வுகள் குறைவாகவே நடத்தப்படுகின்றன. எந்த வகை உணவுகளில் இப்பொருட் களின் எச்சங்கள் உள்ளன என்பதை தெரிந்துகொண்டு பயன்படுத்தினால் இவ்வகை பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தனிநபரால் மட்டும் இதை செய்ய முடியாது. உலகை பாதிக்கும் ஒரு பொது ஆரோக்கியப் பிரச்சனை இது என்பதை கொள்கை வகுப்பவர் களும் ஆட்சியாளகளும் உணர்ந்து செயல்பட வேண்டும்என்று விஞ்ஞா னிகள் வலியுறுத்துகின்றனர்.