tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பஞ்சலிங்க அருவிக்கு செல்ல அனுமதி

உடுமலை, செப்.11- திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர் வரத்து பாது காப்பான அளவில் இருந்ததால், வியாழனன்று சுற்றுலா பய ணிகள் அனுமதிக்கப்பட்டனர். திருமூர்த்தி மலைப்பகுதியில் மழைப்பொழிவு இருந் ததால், புதனன்று காலை நீர்வரத்து அதிகரித்து வந்தது.  இதனால் சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல  அனுமதிக்கப்படவில்லை. மேலும், அடிவாரத்தில் உள்ள  தோணி ஆற்றில் நீர் வரத்து அளவு அதிகரித்து அமண லிங்கேஸ்வரர் கோவில் பகுதியை சூழ்ந்து சென்றது. பாது காப்பு கருதி கோவிலுக்கும் அனுமதிக்கப்படவில்லை. வியா ழனன்று திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர் வரத்து  பாதுகாப்பான அளவில் உள்ளதாலும், மழைப்பொழிவு இல் லாமல் வானம் தெளிவாக உள்ளதாலும், சுற்றுலாப் பயணி கள் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இருசக்கர வாகனத்தில் சென்றவர் கார் மோதி பலி கொலை வழக்கில் பேரூராட்சித் தலைவர் கைது

திருப்பூர், செப். 11 - திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட  பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது கார் மோதிய தில் படுகாயம் அடைந்து பலியானார். இந்த சம்பவம் தொடர் பாக காவல் துறையினர் புலன் விசாரணை செய்ததில் உயிரி ழந்தவர் விதிமுறைக்குப் புறம்பாக சாலை போட்டது தொடர் பாக பேரூராட்சித் தலைவர் மீது புகார் தெரிவித்த நிலையில்,  ஆத்திரமடைந்து விபத்தை ஏற்படுத்திக் கொலை செய்த தாகத் தெரியவந்தது. எனவே பேரூராட்சித் தலைவரை போலீ சார் கைது செய்துள்ளனர். சாமளாபுரம் கருகம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி  (57). அப்பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு சென்ற பழனிச்சாமி,  செவ்வாய்கிழமையன்று மாலை இருசக்கர வாகனத்தில் வீட் டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். சாமளாபுரம் - காரணம் பேட்டை சாலையில் கருகம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளி அருகே வந்தபோது, அவருக்கு பின்னால் வந்த கார்  ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.  இதில் பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். காரில் இருந்த வர் போதையில் இருந்தது தெரியவந்தது.  விபத்தை பார்த்த பொதுமக்கள், காரில் தப்பியது தொடர் பாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து  மங்க லம் போலீசார் விபத்தில் சிக்கிய பழனிச்சாமி உயிரிழந்த நிலை யில், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சட லத்தை அனுப்பி வைத்தனர். போலீஸாரின் தொடர் விசார ணையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு, தப்பிச் சென்றது சாமளா புரம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி (60) என்பதை கண்ட றிந்தனர். அவர் குடிபோதையில் இருந்த நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்தியதும் போலீஸாரின் முதல்கட்ட விசார ணையில் தெரியவந்தது. தொடர்ந்து  பேரூராட்சி தலைவ ரான பழனிச்சாமியை பிடித்து விசாரித்தனர். இந்நிலையில் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதியினரும் குற்றம் சாட்டிய நிலையில், போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். இதில் அதிர்ச்சிகரமான தக வல்கள் வெளியாகின. முன்விரோதம் காரணமாக இருசக் கர வாகனத்தின் மீது, காரை ஏற்றி பழனிசாமியை, சாமளாபு ரம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி கொலை செய்தது கண்டறி யப்பட்டது. இது தொடர்பாக மங்கலம் போலீசார் கூறும் போது, “மதுபோதையில் சாமளாபுரம் பேரூராட்சி தலைவர்  பழனிச்சாமி, விபத்து ஏற்படுத்தி அவரை கொலை செய்துள் ளார். விபத்தில் இறந்த பழனிச்சாமி, பேரூராட்சி  நிர்வாகம் மக்க ளுக்கு பயன்பாடில்லாத தனியார் இடத்தில் போடப்பட்ட சாலை தொடர்பாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இதனால் அந்த பணி நிறுத்தப்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த நிலையில், இந்த விபத்தை ஏற்படுத்தி பேரூ ராட்சி தலைவர் கொலை செய்திருப்பது கண்டறியப்பட்ட தாகத் தெரிவித்தனர்.

தற்காலிக பட்டாசு உரிமம்: அக்.10 க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

திருப்பூர், செப்.11 - 2025 ஆம் ஆண்டு தீபா வளி பண்டிகையை முன் னிட்டு, திருப்பூர் மாநகரக் காவல் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளைத் தவிர்த்து, ஊர கப் பகுதிகளில் தற்காலிக  பட்டாசு கடைகள் நடத்த  வெடிப்பொருள் சட்டத்தின் கீழ் தற்காலிக பட்டாசு உரி மம் கோரி வரும் அக்.10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரண வரே வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, வெடிப்பொருள் சட்டத்தின் கீழ் தற்காலிக பட்டாசு உரி மம் கோரி விண்ணப்பம் செய்ய விரும்புகிறவர்கள், விண்ணப்பங்களை அக்.10 ஆம் தேதிக்கு முன்னதாக  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களில் ((Common Service Center (CSC)) விண்ணப்பிக்கலாம். மனை  வரைபடம் / கடை அமைக்க விருக்கும் இடத்தின் வரைப டம் (Blueprint Map) - 2  பிர திகள் (A4-அளவில் - 1, கடை  அமைக்கவிருக்கும் இடத் தின் பட்டா மற்றும் ஆவணங் கள், உரிய கணக்குத் தலைப் பின் கீழ் அரசுக் கணக்கில் தற் காலிக பட்டாசு உரிமக்கட்ட ணம் ரூ.600 (www.karuvoo lam.tn.gov.in/challan/ec hallan) என்ற இணையத ளத்தில் செலுத்தியதற்கான அசல் செலுத்துச் சீட்டு. (HOD  code:02301;  DDO Code:32010 004; Head of Account: 00706 0103AA22799) மனுதாரர் தற் காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் உரி மையாளர் எனில், அதற் கான ஆவணங்கள் மற்றும்  நடப்பு நிதி ஆண்டின் சொத்து  வரி செலுத்திய ரசீது நகல்  சமர்பிக்க வேண்டும். வாடகை கட்டிடம் எனில், வரி  செலுத்திய ரசீது நகலு டன் இடத்தின் உரிமையாள ரிடம் ரூ.20 க்கான முத்திரைத் தாளில் பெறப்பட்ட அசல்  சம்மதக் கடிதம்., விண்ணப்ப தாரரின் புகைப்படம், விண் ணப்பதாரரின் முகவரி சான்று. (Fire Extinguisher certificate) பெற்று இருக்க  வேண்டும். மேலும் நிர்வாகக்  காரணங்களை முன்னிட்டு அக்.10 ஆம் தேதிக்குள் தற் காலிக பட்டாசு உரிமம் கோரி  வரப்பெறும் விண்ணப்பங் கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீல னைக்கு எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது என தெரி வித்துள்ளார்.

நிறுத்தப்பட்ட குடிநீர் விநியோகத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

திருப்பூர், செப்.11- திருப்பூர் இரண்டாவது கூட்டு குடிநீர்  திட்டம் மூலம்  நிறுத்தப்பட்ட குடிநீர் விநியோகத்தை மீண்டும் செயல்படுத்த  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்  கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலை மையில் புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துல் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் நாடு விவசாயிகள் சங்க  வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ். அப்புசாமி அளித்த மனுவில் கூறியிருப் பதாவது, கடந்த இரண்டு அண்டுகளாக  மேட்டுப்பாளையத்தில் 2 ஆவது கூட்டு  குடிநீர் திட்டம் மூலம் திருப்பூர்  ஒன்றியத்திற்குட்பட்ட பொங்கு பாளையம் ஊராட்சி பரமசிவம்பா ளையம், மாரப்பாளையம், பள்ளி பாளையம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர்  விநியோக்கிப்பட்டு வந்தது. தற்போது இந்த குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட் டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள்  கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே உடனடியாக மீண்டும் 2 ஆவது  கூட்டு குடிநீர் திட்டம் மூலம்  குடிநீர் விநி யோகிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இன்று மின்தடை

திருப்பூர், செப்.11- உடுமலையை அடுத் துள்ள பூலாங்கிணறு துணை  மின் நிலையத்தில் பராமரிப் புப் பணிகள் நடைபெற இருப்பதால், வெள்ளிக்கி ழமை (காலை 9 மணி முதல்  மாலை 5 மணி வரை மின்சா ரம் இருக்காது என செயற் பொறியாளர் தி.மூா்த்தி தெரி வித்துள்ளார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி

திருப்பூர், செப்.11 - திருப்பூரில் பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டதால், இரு நாட்களாக நடை பெற்று வந்த சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு  வந்தது. வியாழனன்று முதல் தொழிலாள ர்கள் பணிக்குத் திரும்பினர். திருப்பூர் பிரிட்ஜ்வே காலனி சிட்கோ பகுதியில் கோல்டன் லாரி புக்கிங் ஆபீஸ்  மற்றும் பாரத் பார்சல் புக்கிங் ஆபீஸ் நிறுவ னத்தில் பணியாற்றி வந்த சுமைப்பணி தொழி லாளர்கள் 17 பேர் தொழிற்சங்கங்களில் சேர்ந்ததால் பணி மறுக்கப்பட்டது. மேலும்  குறைந்த கூலிக்கு வடமாநில தொழிலாளர் களை அழைத்து வந்து பணியில் ஈடுபடுத் தப்பட்டனர். இதை கண்டித்து செவ்வா யன்று சுமைப்பணி தொழிலாளர்கள் நிறுவ னத்தின் லாரியை சிறைபிடித்து போராட்டத் தில் ஈடுபட்டனர். மேலும், வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தனர். செவ்வாய் மற்றும்  புதன் ஆகிய இரு தினங்கள் வேலை நிறுத்த  போராட்டம் நடைபெற்றது. மேலும், இது தொடர்பாக புதனன்று காலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட வில்லை. இதையடுத்து போராட்டம் தொடர்ந் தது. புதனன்று இரவு வடக்கு காவல் நிலை யத்தில் காவல் ஆய்வாளர் ஜகநாதன் தலை மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலன் கூறு கையில், பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக மீண்டும் பணிக்கு சேர்க்க வேண்டும். மேலும், வட மாநில தொழிலாளர்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் கூலி வழங்க வேண்டும் என  தெரிவித்தார். இதை நிர்வாகம் தரப்பில் ஏற்று  கொண்டனர். இதையடுத்து இரண்டு நாள்  வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந் தது. வியாழனன்று முதல் விடுவிக்கப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு சென்ற னர்.