tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும் பெரம்பலூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை  முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும் பெரம்பலூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

பெரம்பலூர், செப். 22-  சிஐடியு பெரம்பலூர் அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் ஐந்தாவது மாவட்ட மாநாடு ஞாயிற்று க்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் ரத்னமாலா தலைமை ஏற்று மாவட்ட மாநாட்டை துவக்கி வைத்தார். மாநிலத் துணைத் தலைவர் மணிமேகலை சிறப்புரையாற்றினார். அஞ்சம்மாள் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்டச் செயலாளர் தமிழரசி வேலை அறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் சுமதி வரவு - செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மல்லிகா நன்றியுரையாற்றினார்.  மாவட்டத் தலைவராக மேனகா, மாவட்டச் செயலாளராக தமிழரசி, மாவட்டப் பொருளாளராக சுமதி ஆகியோரும், துணைத் தலைவர்களாக தனம், நிர்மலா, தமிழ்ச்செல்வி, ராஜேஸ்வரி ஆகியோரும், துணைச் செயலாளர்களாக லலிதா, சாந்தி, ராஜேஸ்வரி கவிதா ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  அங்கன்வாடி ஊழி யர்கள், உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியராக்கி 26 ஆயிரம் ஊதியம் வழங்கிட வேண்டும். பணிக்கொடை ரூ.10 லட்சம் வழங்கவும், குடும்ப வரன்முறையுடன் கூடிய பென்சன் வழங்கிட வேண்டும். அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் 5 ஜி செல்போன்களையும், 5 ஜி சிம் கார்டையும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.