tamilnadu

சென்னை ஏரிகளின் நீர் திறப்பால் மக்கள் அச்சப்பட தேவையில்லை நீர்வளத்துறை அறிவிப்பு

சென்னை ஏரிகளின் நீர் திறப்பால்  மக்கள் அச்சப்பட தேவையில்லை   நீர்வளத்துறை அறிவிப்பு

சென்னை,அக்.22- சென்னையில் பெய்து வரும் கனமழையால் நகரின் குடிநீர் ஆதார மாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஆகிய ஏரிகள் வேக மாக நிரம்பி வருகின்றன. ஏரிகளின் பாது காப்பை கருத்தில் கொண்டு உபரி நீர் படிப்படியாக திறக்கப்பட்டு வருவதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து செவ்வாய் மாலை வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. புதனன்று காலை முதல் இது 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் குன்றத்தூர், அனகாபுத்தூர், அடையாறு பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரி 33 அடி நிரம்பியுள்ளதால் 4,500 கன அடி உபரி நீர் திறக்கப் பட்டுள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவுள்ள புழல் ஏரியில் 3,006 கன அடி நீர் நிரம்பியுள்ளதால், முதலில் 200 கன அடி நீரும், பின்னர் 500 கன  அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இந்த  உபரி நீர் எண்ணூர் கடலை வந்தடை யும். நாரவாரிகுப்பம், சாமியார் மடம், மணலிபுதுநகர், கொசப்பூர் உள்ளிட்ட பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏரிகளின் நீர்மட்டம் போதுமான இடைவெளியில் பராமரிக்கப்படு வதாகவும், கனமழை பெய்தாலும் நீர் திறப்பு மட்டுப்படுத்தப்பட்டு அடை யாறு, கொசஸ்தலையாறு வழியாக பாதுகாப்பாக கடலை அடையும் என்றும், மக்கள் அச்சப்பட தேவை யில்லை என்றும் நீர்வளத்துறை அறி வித்துள்ளது.