இராஜபாளையத்தில் மக்கள் ஒற்றுமை மேடை உறுதிமொழி
இராஜபாளையம், அக்.2– காந்தி ஜெயந்தியையொட்டி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் “மத வெறி மாய்ப்போம் – மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. இராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக முற்போக்கு எழுத்தா ளர் -கலைஞர்கள் சங்கத்தின் கிளைச் செய லாளர் மைதிலி தலைமையிலும், ஸ்ரீவில்லி புத்தூர் பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற நிகழ்ச்சிக்கு சிறுபான்மை நலக் குழு மாவட்டச் செயலாளர் மரியடேவிட் தலை மையிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் தமுஎகச கிருண் ணன், மாற்றுத்திறனாளிகள் சங்கச் செய லாளர் சரவணன், சிபிஎம் மாநில செயற் குழு உறுப்பினர் கே.அர்ஜுனன், மாவட்டக் குழு உறுப்பினர் திருமலை, நகரச் செய லாளர்கள் சுப்பிரமணியன், ஜெயக்குமார், சிஐடியு நிர்வாகிகள் கண்ணன், பிச்சைக் கனி, சந்தானம், விவசாயிகள் சங்க நிர்வாகி பீம்ராஜா, ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி ரேணுகாதேவி, தனலட்சுமி, வீரசதானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
