ராணிப்பேட்டையில் ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி மத்திய மாநில, பொது துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் புதனன்று (அக். 1) மாவட்டத் தலைவர் என்.சுந்தரேசன் தலைமையில் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து சங்க நிர்வாகிகள் டி.வி.எத்திராஜ், டி. குப்பன், என்.ஜெயகுமார், ஜே.சந்திரசேகரன், ஜி.பாண்டுரங்கன், எ.அப்துல் ரஹீம், எ.லியோ பால் நிர்மல் குமார், மு.சிவராமன், கே.லட்சுமிபதி, என்.கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
