ஓய்வூதியர் சங்க தருமபுரி வட்ட மாநாடு
தருமபுரி, ஆக.24- அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க தருமபுரி வட்ட மாநாட் டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க தருமபுரி வட்ட 5 ஆவது மாநாடு, ஊர்தி ஓட்டுநர் சங்க அலுவலக கட்டிடத்தில் ஞாயிறன்று, வட்டத் தலைவர் ஏ.மணி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் முருக மாணிக்கம் வரவேற்றார். இணைச்செயலாளர் மாயக் கண்ணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டச் செய லாளர் எம்.பெருமாள் துவக்கவுரையாற்றினார். வட்டச் செய லாளர் பி.முனிராஜ், பொருளாளர் எம்.பாபு ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி வாழ்த்திப் பேசினார். இம்மாநாட் டில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்திலுள்ள குறைபாடுகளை களைய வேண்டும். ஓய்வூதியர் உரிமையை பறிக்கும் நீதி சட்டத் திருத்தம் – 2025யை திரும்பப்பெற வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவர் எஸ். பழனிசாமி நிறைவுரையாற்றினார். சுப்பிரமணி நன்றி கூறி னார்.