கலைஞர் நினைவு நாளில் அமைதி பேரணி: முதலமைச்சர் அழைப்பு
சென்னை: முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவு நாளான ஆகஸ்ட் 7 அன்று சென்னையில் அவரது நினைவிடம் நோக்கி நடைபெறும் அமைதி பேரணியில் தொண் டர்கள் கடலென திரள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “நெடுநாள் கழித்து இந்த மடல் வாயிலாக உரையாடுவதாகவும், சில நாட்களாக மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் இருந்த படியே அரசு அலுவல்களையும் கழகப் பணிகளையும் செய்து கொண்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஓய்வுக்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் வழக்க மான பணிகளைத் தொடங்கியுள்ளதாகவும், அண்ணா அறிவாலயத்தில் உத்திரமேரூர் தொகுதி நிர்வாகிகளு டன் கலந்தாலோசித்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இதுவரையில் 39 தொகுதிகளின் கழக நிர்வாகி களைச் சந்தித்திருப்பதாகவும், இந்த சந்திப்பு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். மாவட்டங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள தலைவர் கருணாநிதியின் உருவச் சிலைகளுக்கு அந்தந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் மாலையிட்டு மரியாதை செலுத்த வேண்டும் என்றும், கிளைகள்தோறும் தலைவர் கருணாநிதியின் நினைவு போற்றப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிகழ்வு களில் கழக நிர்வாகிகள் காலை 7 மணியளவில் பங்கேற்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து மூர்த்தி (50) என்பவருக்கு சொந்தமான படகில் அவர், செல்வராஜ் (55), விஜயகுமார் (40), சேகர் (60) ஆகிய 4 பேரும் முத்துவேல் (43) என்பவருக்குச் சொந்த மான படகில் முத்துவேல், தனபால் (40), விஸ்வநாதன் (32) பிரகாஷ் (30) ஆகிய 4 பேரும், ரகுமான் (31) என்பவ ருக்குச் சொந்தமான படகில் அவர், செல்வம் (45), அஜீத் (27), பாண்டியராஜ் (28), சஞ்சய் (26), மதேஸ் (25) ஆகிய 6 பேரும் என மொத்தம் 3 பைபர் படகில் 14 மீன வர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 4 பைபர் படகில் வந்த 14 இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பைபர் படகையும் வழி மறித்து மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள 850 கிலோ மீன்பிடி வலை, ஜி.பி.எஸ். கருவி, செல்போன், நூறு லிட்டர் டீசல் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். கடற்கொள்ளையர்கள் கத்தி மற்றும் ஆயுதங்களால் தாக்கியதில் காயம் அடைந்த செல்வராஜ், மூர்த்தி, தன பால் ஆகிய மூன்று மீனவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
புதிய திருப்பம்
திருநெல்வேலி: தமிழகத்தை உலுக்கிய திருச்சி தொழி லதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் பல ஆண்டு களாக துப்பு துலங்காமல் இருந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக பாளை மத்திய சிறையில் கைதி ஒரு வரிடம் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேம்பாட்டு பணி நிறைவு
சென்னை: மெரினா கடற்கரையில் நீல கொடி கடற்கரை சான்றிற்கான மேம்பாட்டு பணிகளை சென்னை மாநகராட்சி நிறைவு செய்துள்ளது. நீல கொடி கடற்கரை திட்டம் நன்னீர் மற்றும் கடல் பகுதிகளில் நிலத்தின் தன்மையின் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான ஒரு சர்வதேச முயற்சி. இது, சுற்றுச்சூழல் கல்வியின் அடிப்ப டையில் நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது.
‘ஏற்றுக் கொள்ள மாட்டோம்’
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் - நயினார் நாகேந்திரன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு உள்ளது. “நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஓபிஎஸ் இன்னும் நிதானமாக தனது அரசியல் நகர்வு களை செய்திருக்க வேண்டும்” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் அதிகாரி இடமாற்றம்?
சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் ரூபாய் ஆயிரம் கோடி மோசடி புகார் தொடர்பாக அதன் தலைமையகம் மற்றும் எழும்பூரில் உள்ள நிர் வாக இயக்குநர் விசாக னின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தனர். நிர் வாக இயக்குநர் விசா கன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப் பட்டது. இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வேறு துறைக்கு இட மாற்றம் கேட்டுள்ளதாக வும், அதற்கு அரசு ஒப்பு தல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர் சாதனை
சென்னை: இளம் வயதில் எவரெஸ்ட் சிக ரத்தை ஏறி சாதனை படைத்த சென்னை மாணவர் ஆகாஷிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான அபர்ணா சிகரத்தில் ஏறி சாதிக்க வேண்டும் என்று செய்தி யாளரிடம் தனது அனு பவத்தை பகிர்ந்து கொண் டார் ஆகாஷ்.
அனைவரும் போராட வேண்டும்
சென்னை: ஆதார் அட்டையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுவதால், சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகிய வற்றை மறைமுகமாக கொண்டு வருகிறார்களா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. எனவே, தேர்தல் ஆணையத் திற்கு எதிராக வெறும் அறிக்கை மட்டும் போதாது. அனைத்துக் கட்சிகளும் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.