காலமானார்
திருவாரூர், ஜூலை 22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றியக் குழு உறுப்பினர் கே.அமிர்தலிங்கத்தின் மூத்த மகன் ஏ.தினேஷ்(33) அகால மரணம் அடைந்தார். அன்னாரது இறுதி நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வீ. அமிர்தலிங்கம், கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சுந்தரமூர்த்தி, கே.பி.ஜோதிபாசு, பி.கோமதி, ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். சுந்தரய்யா, ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ். ரகுபதி, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் கே. இளையராஜா ஆகியோர் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.