காலமானார்
சிவகாசி, ஜூலை 16 - விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா அனுப்பன்குளம் கிரா மத்தைச் சேர்ந்த கு.சங்கரலிங்கம் (73) புதன்கிழமை மதியம் காலமா னார். இவர், தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரனின் தந்தை ஆவார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி, ஜூலை 17 (வியாழன்) அன்று மதியம் 12 மணியளவில், அனுப்பன்குளம் கிராமத்தில் நடைபெறுகிறது. தகவலறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி.ராம கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மற்றும் தலை வர்கள் ஏ.கே.பத்மநாபன், பி.சம்பத், ஆர். கருமலையான் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினர்கள், விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி, தீக்கதிர் ஊழி யர்கள் இரங்கல் தெரிவித்தனர். மறைந்த சங்கரலிங்கம் அவர்களுக்கு மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.