பெ. சண்முகத்துடன் தூய்மைப் பணியாளர்கள் சந்திப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தை, எல்டியுசி சங்க நிர்வாகிகள், திங்களன்று (ஆக.18) கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது, சென்னை பெருநகர மாநகராட்சியின் 5, 6 மண்டல தூய்மைப் பணிகள் தனியார்மய எதிர்ப்புப் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.