திருப்பராய்த்துறை இராமகிருஷ்ணா குடிலை பெ.சண்முகம் பார்வையிட்டார்
திருச்சிராப்பள்ளி, ஆக. 28- திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் திருப்பராய்த்துறையில் செயல்பட்டு வருகிறது இராம கிருஷ்ணா குடில். ஆதரவற்ற மாண வர்களுக்காக இலவச உண்டு உறை விட பள்ளியாக செயல்பட்டு வரும் இந்த இராமகிருஷ்ணா குடிலை ஆர்எஸ் எஸ் கும்பல் கைப்பற்றத் துடிக்கிறது. இதனைக் கண்டித்து முன்னாள் மாணவர்களின் போராட்டக் குழுவும், ஊர் பொதுமக்களும் களப்போராட்டம் மற்றும் சட்டப்போராட்டம் நடத்தி வரு கின்றனர். இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் இராமகிருஷ்ணா குடிலுக்கு (ஆக., 28) நேரடியாகச் சென்று, குடிலின் பிரம்மச்சாரிகளை சந்தித்து உண்மை நிலை குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்பின்போது, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றி செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.லெனின், குடிலின் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முத்து கிருஷ்ணன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் கருணாநிதி, திருப்பராய்த்துறை முன்னாள் ஊரா ட்சி மன்றத் தலைவர் பிரகாசமூர்த்தி, அந்தநல்லூர் ஒன்றியக் குழு உறுப்பி னர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குடிலை ஆர்எஸ்எஸ் பிடியிலிருந்து மீட்பதற்கு அனைத்து விதமான உத விகளையும் செய்வதாக பெ.சண்முகம் குடிலின் நிர்வாகிகளிடம் உத்தரவாதம் அளித்துள்ளார்.