உயர் ரக மதுபானக்கூடம் அமைப்பதற்கு எதிர்ப்பு
பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
நாமக்கல், அக்.19- பள்ளிபாளையத்தில் உயர் ரக மது பானக்கூடம் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து, அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தில் செயல்பட்டு வரும் விசைத்தறி கூடங்களில் லட்சகணக்கான தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சொற்ப வருமானத்தில் வேலை பார்த்து வரும் இவர்கள், நுண் நிதி நிறுவனங் கள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடி களுக்குள்ளாகி வருவதோடு, மதுபழக் கத்திற்கு அடிமையாகி கடும் இன்னல் களை சந்தித்து வருகின்றனர். இந்நிலை யில், சில மாதங்களுக்கு முன்பு, பள்ளி பாளையம் நகரின் மையப்பகுதியில் கண்டிப்புதூர் என்ற பகுதியில் அமைக்க இருந்த மனமகிழ் மன்றத்திற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில், மனமகிழ் மன்றம் அமைக்கும் நடவ டிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனிடையே, சனியன்று தனிநபர் ஒருவர் “பைன் ஆர்ட்ஸ் ரெக்ரியேஷன் கிளப்” என்ற பெயரில் பள்ளிபாளையத்தில் மன மகிழ் மன்றத்தை துவக்கியுள்ளார். இதனையறிந்த பொதுமக்கள் உயர் ரக மதுபானக்கூடத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘தங்கள் பகுதியில் உயர் ரக மதுக்கூ டம் அமைந்தால், ஏற்கனவே வாழ்வாதா ரம் இழந்துள்ள தங்களது குடும்பம் கேள்விக்குறியாகிவிடும்’ எனக்கூறிய பொதுமக்கள், பல கட்ட போராட்டங் களையும் மீறி தற்போது மதுக்கூடம் திறக்கப்பட்டிருப்பது வேதனை அளிக் கிறது. மருத்துவமனைகள் நிறைந்த பகு தியாகவும், குறுகிய சாலை பகுதி யாக இருப்பதால் விபத்துகள் ஏற்படுவ தோடு பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும். எனவே, உடனடியாக உயர் ரக மதுபானக்கூடத்தின் அனு மதியை ரத்து செய்ய வேண்டும், என வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார், பொது மக்களை சமரசம் செய்து அங்கிருந்து களைய செய்தனர். மேலும், மதுபானக் கூடத்தை மூடாவிட்டால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
